Header Ads



பொதுஜன பெரமுனவுக்கு தெளிவான பெரும்பான்மையை வழங்குமாறு மக்களை கேட்ட பிரதமர்


அரசமைப்பின் 19வது திருத்தம் பொதுமக்களின் உரிமைகளை மீறியுள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் கல்விமான்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ராஜபக்சாக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்காக நல்லாட்சி அரசாங்கம் 19வது திருத்தத்தை கொண்டுவந்தது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுவே அவர்களது முக்கிய நோக்கமாகயிருந்தாலும் இது மக்களின் அடிப்படை உரிiமைகளை மீறியது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அனைத்து தடைகளின் மத்தியிலும் முன்னைய அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி 6.9 மில்லியன் மக்கள் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தெளிவான பெரும்பான்மையை வழங்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் இதன் மூலம் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் அமைச்சரவையைநியமிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.