Header Ads



கரு தலைவரானால், செயலாளராக வர தயாராகும் மங்கள...?


ஐக்கிய தேசியக் கட்சியின் இடைக்காலத் தலைவராக கரு ஜயசூரிய நியமிக்கப்படும் பட்சத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக மங்கள சமரவீர தெரிவு செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் மங்கள சமரவீரவுக்கு அழைப்பை ஏற்படுத்திய ரணில் விக்கிரமசிங்க அவரை உடனடியாக கொழும்புக்கு அழைத்து, கட்சி மறுசீரமைப்பு பற்றி கலந்துரையாடியுள்ளார்.

இதன்படி மங்கள சமரவீரவால் மறுசீரமைப்பு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைமைப் பதவியை கரு ஜயசூரியவுக்கு வழங்குமாறும் கோரியுள்ளார். எனவே, கரு ஜயசூரிய தற்போது தலைமைப் பதவி தொடர்பில் விடுத்துள்ள அறிவிப்பின் பின்னணியில் மங்கள சமரவீரவே செயற்படுகின்றார் எனக் கூறப்படுகின்றது.

கரு ஜயசூரியவின் கோரிக்கையை ஏற்று அவருக்கு தலைமைப் பதவி வழங்கப்படும் பட்சத்தில் பொதுச் செயலாளர் பதவி மங்களவுக்கு வழங்கப்படலாம் எனவும், இது தொடர்பான கோரிக்கையை அவர் ஏற்கனவே முன்வைத்துள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

1 comment:

  1. If want to save UNP then only way Sajith must appoint a chief otherwise no chance to UNP.

    ReplyDelete

Powered by Blogger.