Header Ads



தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய சில வேட்பாளர்கள் போட்டியிடாத காரணத்தினால் நஷ்டம்

கடந்த பொதுத்தேர்தலில் தான் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியினுடைய தலைவர் தனது கடமையை சரியாக நிறைவேற்றினாலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறக் கூடிய சில வேட்பாளர்கள் போட்டியிடாத காரணத்தினால் நஷ்டம் ஏற்பட்டதாக விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.


சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிப்பரப்பான செய்தி நிகழ்ச்சியில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,


போட்டியில் விளையாடிய எமது தலைவர் சிறந்தவர். முழு அணியும் விளையாடவில்லை. உதாரணமாக மொனராகலையில் ரஞ்சித் மத்தும பண்டார போட்டியிடவில்லை.


போட்டியிட்டு இருந்தால் மேலதிகமாக ஒரு ஆசனத்தை கைப்பற்றி இருக்கலாம். நான் போட்டியிட்டு இருந்தாலும் அது நடந்திருக்கும்.


நாங்கள் ராஜபக்சவினரை விமர்சித்தோம், குறை கூறினோம், ஆனால் மக்கள் கேட்கவில்லை என்பது இரண்டாவது காரணம். நபர்களை விமர்சிக்கும் அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர்.


நானும் விமர்சித்தேன், குறை கூறினேன் என்பது உண்மை. நாங்கள் கூறியதை மக்கள் ஏற்கவில்லையே. எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் தனது குறைகளை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.


தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து எந்த வருத்தமும் இல்லை. எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே மொனராகலையில் இருந்து விலகி கம்பஹாவில் போட்டியிட்டேன் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.