Header Ads



கல்வியறிவு ஒரு தனிநபரின், சமூக பிரதிநிதியின், மக்கள் தலைவனின் வாழ்க்கையில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றது..?

பாகம் 1

படித்தவர்கள்பண்பானவர்கள் புத்திஜீவிகள் அனைவரும் இணைந்து நமது உடன் பிறந்த, பிறக்காத சகோதர சகோதரிகளையும் நேர் பாதையிலும் அறிவுப் பாதையிலும் பயணிக்க உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள்.

ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது அவர்களினுடைய கல்வியறிவு. கல்வியறிவு என்பது தொழில் சார்ந்த கல்வி அறிவு மட்டும் அல்ல உலகம் சார்ந்த கல்வி அறிவு பிரதானமானது. தொழில் சார்ந்த கல்வி அறிவு நம்மிடத்தில் நிறையவே உண்டு ஆனால் உலகம் சார்ந்த கல்வி அறிவு மிகவும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அதன் விளைவாக தான் பெருமளவில் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள். ஏமாற்றுபவர்களுக்கும் உலகம் சார்ந்த கல்வி அறிவு இருந்தால் அல்லது இருந்திருந்தால் பெருமளவில் ஏமாற்றவும் மாட்டார்கள் ஏமாற்றி இருக்கவும் மாட்டார்கள். 

தொழில் சார்ந்த கல்வி அறிவு உடையவர்கள் Eg. Doctors, Engineers, Accountants, Lawyers, etc etc. இவர்களுடைய துறையில் இவர்களுக்கு அறிவு உண்டு ஆனால் அதற்கு வெளியால் அவர்களுடைய அறிவிற்கு உட்பட்ட வகையில் அபிப்பிராயங்கள் கூறுவார்கள் ஆனால் ஆதாரபூர்வமாக தகவல்களோடு விடயங்களை முன்வைக்க மாட்டார்கள் (ஒரு சிலரைத் தவிர) காரணம் நமது கல்வி அவ்வாறுதான் அமைந்திருக்கின்றது. 

மேற்கத்திய நாடுகளின் கல்வியில்,  ஆரம்ப பாடசாலைகளில் (Primary education) ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை அறிவு ஊட்டப் படுகின்றது, தொழில் சார்ந்த அறிவு ஊட்டப் படவில்லை. இரண்டாம் தர பாடசாலைகளில் (Secondary education) அடிப்படை அறிவும் தொழில் சார்ந்த அறிவும் ஊட்டப் படுகின்றது. 

அடிப்படை அறிவு அல்லது உலகம் சார்ந்த அறிவு என்பது

1. Language skills - மொழி அறிவு

2. Improve reading and speaking ability - வாசித்தல், பேசுதல் போன்ற திறமைகளை வளர்த்தல்.

3. Establish analytical skills - ஒன்றை தரவுகளையும் நம்பத் தகுந்த ஆதாரங்களையும் வைத்து நன்றாக ஆராய்ந்து முடிவு எடுக்கும் திறமைகளை வளர்த்தல். இன்று நமது சமூகத்தில் இல்லாத ஒன்று இது தான். இஸ்லாமும் இதை நன்றாக கற்று தந்து இருக்கிறது.

4. Develop self confidence - தன்நம்பிக்கையை உருவாக்குதல்.

5. Independentcy - தனித்து செயற்படக்கூடிய, முடிவு எடுக்கக் கூடிய திறமையை வளர்த்தல்.

6. Understanding and acceptance - சரியான வழியில் புரிந்து கொள்ளுதலும், சரியானவற்றை ஏற்றுக் கொள்ளுதலும்.

7. Self respect and respect others - சுய மரியாதையை வளர்த்தலும், மற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுதலும்

8. Lateral thinking - வெவ்வேறு திசைகளில் சிந்திக்க கூடிய திறமைகளை வளர்த்தல்.

9. Develop right attitude - சரியான, நேர்மையான அணுகுமுறையை உருவாக்கிக் கொள்ளுதல்

10. Establish multiple skills - பலதரப்பட்ட திறமைகளை உருவாக்குதல்.

11. Socialization - சமூக மயப்படல்.

12. Basic rights of us and others - நமதும் மற்றவர்களுடைய துமான அடிப்படை உரிமைகள்.

13. Basic political rights and political knowledge - அடிப்படை அரசியல் உரிமையும், அரசியல் அறிவும்.

இன்னும் நிறைய விடயங்கள் இருக்கின்றன இவைகள் ஒவ்வொன்றும் எவ்வாறு நமது வாழ்வில் பங்களிப்பு செய்கின்றன என்பதை அடுத்தடுத்த கட்டங்களில் பதிவிடுகிறேன் இன்ஷா அல்லாஹ்.

Dr. Anpudeen Yoonus Lebbe

No comments

Powered by Blogger.