இன்று ராமருக்கு கோயில் கட்டலாம், ஆனால் உலகமுடிவு நாள்வரை அது பாபரி பள்ளிவாசலாகத்தான் இருக்கும்
பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கோவிலுக்கு பூமிபூஜை விழா நடைபெறும் பின்னணியில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் பொதுச் செயலாளர்,
‘சட்டத்திற்கு எதிராக உரிமையிழப்புச் செய்துவிட்டதால் எதார்த்தம் மாறாது, பாபரி மஸ்ஜித் வரலாற்றுபூர்வமாகவும் ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையிலும் ஒரு மஸ்ஜிதாகவே தொடரும்” என்று கூறியிருக்கிறார்.
“ஷரீஅத் சட்டப்படி ஓர் இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டால் அது உலக முடிவு நாள் வரை பள்ளிவாசலாகவே தொடரும். ஆகவே பாபரி மஸ்ஜித் அன்றும் பள்ளிவாசல்தான், இன்றும் பள்ளிவாசல்தான்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
“பள்ளிவாசலில் விக்ரகங்களைக் கொண்டுவந்து வைப்பதன் மூலமோ, பூஜைகள் நடத்துவதன் மூலமோ, சில காலம் தொழுகை நடைபெறவில்லை என்பதாலோ அதைப் பள்ளிவாசல் இல்லை என்று சொல்லிவிடமுடியாது. இத்தகைய செயல்கள் மஸ்ஜித் எனும் அந்தஸ்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.
“கோவிலை அல்லது ஏதேனும் இந்து வழிபாட்டுத் தலத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் மஸ்ஜித் கட்டப்படவில்லை என்று நாங்கள் ஆதாரங்களுடன் முன்வைத்த வாதத்தை நவம்பர் ஒன்பதாம் தேதி அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
“மஸ்ஜித் இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் பாபரி மஸ்ஜித் கட்டப்படுவற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருள்கள் என்று உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது.
‘கோவிலை இடித்துப் பள்ளிவாசல் கட்டப்படவில்லை என்பதுதான் இதன் பொருள்.
‘1942 டிசம்பர் 22 வரை பாபரி மஸ்ஜிதில் தொழுகை முறைப்படி நடைபெற்றுவந்தது என்று உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது.
"அன்று இரவு பள்ளிவாசலுக்குள் விக்ரகங்களைக் கொண்டு வந்து வைத்ததும், 1992 டிசம்பர் ஆறில் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் கிரிமினல் நடவடிக்கை என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிலேயே உள்ளது.”
(அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் வெளியிட்ட அறிக்கையிலிருந்து....)
-சிராஜுல்ஹஸன்
ராமன் மனிதனுக்குப் பிறந்திருந்தால், மனிதனுக்குப் பிறந்தவன் எப்படி கடவுளாக முடியும்? கடவுளைப் பெற்றெடுத்தவன் கடவுளுக்கே தந்தை அல்லவா?
ReplyDeleteஇதேபோல அணமையில் கிறிஸ்தவ ஆலயமாக இருந்த ஒரு இடத்தை பள்ளிவாசலாக துருக்கியில் மாற்றி உள்ளார்கள். அப்படி என்றால் அதுவும் உலகம் முடியும்வரை கிறிஸ்தவ ஆலயமாகவே இருக்குமா? இந்து தீவிரவாதிகளின் ராமர் கோவில் காட்டும் வேலையே நான் ஆதரிக்க வில்லை.
ReplyDeletewe have to continue the prayings in any matter, which was a masjid and will be a masjid
ReplyDelete