Header Ads



பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு, வெற்றிபெற்ற சுதந்திரக் கட்சியினரின் விபரம்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமது கூட்டணியில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில வேட்பாளர்கள் பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும் அந்த கூட்டணியில் போட்டியிட்ட சுதந்திரக் கட்சியின் 13 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் முன்னணியில் உள்ளனர். இவர்கள் பொலன்நறுவை மற்றும் பதுளை மாவட்டங்களில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று முதல் இடத்தை பிடித்தனர்.

தமது கூட்டணியில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் விருப்பு வாக்குகளை வழங்க வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட சிலர் பகிரங்கமாக கூறி வந்தனர்.

அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியை கைப்பற்றியதுடன் அங்கஜன் ராமநாதன் நாடாளுமன்ற ஆசனத்தை கைப்பற்றியுள்ளார்.

அங்கஜன் ராமநாதனை தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விபரம்

மைத்திரிபால சிறிசேன - பொலன்நறுவை.

துமிந்த திஸாநாயக்க - அனுராதபுரம்.

மகிந்த அமரவீர - ஹம்பாந்தோட்டை

லசந்த அழகியவண்ண - கம்பஹா

நிமல் சிறிபால டி சில்வா - பதுளை

சாமர சம்பத் - பதுளை

தயாசிறி ஜயசேகர - குருணாகல்

சாந்த பண்டார - குருணாகல்.

ஷான் விஜேலால் - காலி

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - கேகாலை

சாரதி துஷ்மான - கேகாலை

ஜகத் புஷ்பகுமார - மொகராகலை

காதர் மஸ்தான் - வன்னி

1 comment:

Powered by Blogger.