கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிரான மாற்று சக்தியை, கண்களுக்கு எட்டிய தூரத்தில் காணமுடியவில்லை
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும்,
இலங்கையின் வரலாற்றில் உருவாகிய அரசாங்கங்களில் இதுவே மிகவும் பலமான அரசாங்கம். 2015ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடித்ததை போன்று தோற்கடிக்க முடியாத பலமான அரசாங்கம்.
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் மிகவும் பலமானது. அதனை 1970ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்துடன் மாத்திரமே ஒப்பிட முடியும்.
அரசாஙங்கத்தின் பின்னணியில் பொருளாதார சிந்தனை இருக்கின்றது என்ற எண்ணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
எனினும் கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்கம் 1970ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தை விட பலமானது.
70ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் 75ஆம் ஆண்டு கவிழ்ந்தது. சமசமாஜக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகியதால் அந்த அரசாங்கம் கவிழ்ந்தது.
70ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கத்தின் பின்னணியில் பலமிக்க சமூக சக்தி இருக்கின்றது.
இதனை தொழிநுட்பவியல் சமூகம் என நாம் கூறலாம். வியத் மக அமைப்புக்குள் இந்த சமூகம் பொருளாதார நோக்கத்தை அடையாளம் கண்டுள்ளது.
கோட்டாபயவின் கீழ் 15 ஆண்டுகள் வாழ மனதை தேற்றிக்கொள்ள வேண்டும் என நான் 2009ஆம் ஆண்டு கூறினேன். 2015ஆம் ஆண்டு தோற்டிக்கப்பட்டது மகிந்த ராஜபக்சவின் திட்டமே அன்றி கோட்டாபயவின் திட்டம் அல்ல.
கோட்டாபயவின் அரசாங்கம் மகிந்தவின் அரசாங்கம் அல்ல. மகிந்தவின் அரசாங்கத்தை கவிழ்த்தது போல கோட்டாபயவின் அரசாங்கத்தை கவிழக்க முடியாது.
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான மாற்று சக்தியை கண்களுக்கு எட்டிய தூரத்தில் காணமுடியவில்லை.
இதனால், அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் வெற்றிகளை தீர்க்கமாக ஆராயந்த பின்னரே அரசாங்கத்திற்கு எதிராக வாயை திறக்க முடியும் எனவும் நிர்மல் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.
Let us wait and see how the Plan to Amend the Constitution, especially the cancellation of 19A works out. There is also a Huge Problem about the Economy which needs to be put right Sooner than Later. Whether Gota can overcome these two major issues is the Million Dollar question to which there is No Easy answer. Too early to predict Gota's success.
ReplyDeleteThis is an overstimstion , nobody thought that MR will be defeated in 2015 election, because following the war victory mahinda was treated as a king by buddhist people, that's why MR propounded the presidential election thinking that no candidate can defeat him ,
ReplyDeleteSo dont be hurry to come to conclusion ,majority of buddhists voted podu Jane peramuna mainly because of anti muslim compain. But very soon people will change that mentality, because majority know that most of the blames on the muslim community are baseless and not true. So this government cant maintaine the same stand for a longer period. Definitely this regime will collapse very soon .
கண்களுக்கு மிகத்தொலைவில் உள்ளதும் தெறிவதில்லை, அதேபோல் மிகவும் அருகாமையில் உள்ளதும் தெறிவதில்லை.
ReplyDelete