Header Ads



பிச்சை எடுக்கும் கோடீஸ்வரர் - கொழும்பில் ஆச்சரியம்


கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் அருகே பிச்சை எடுக்கும் போது தள்ளு வண்டியைத் திருடியதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவருக்கு, மஹகரகம பமுனுவ பகுதியில் வசிக்கும் கோடீஸ்வரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடலோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிச்சைகாரரின்  சொகுசு மாடி வீட்டின் தோட்டத்தில்,  ஒரு வேகன் ஆர் கார் மற்றும் ஒரு சொகுசு காரையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

வீட்டின் மேல்மாடியை வாடகைக்கு கொடுப்பதன் மூலம்  மாத வருமானம் ரூபா 30.000 மற்றும் பிச்சை எடுப்பதில் தினசரி வருமானம் ரூபா 5,000 கிடைத்துள்ளது.

கொழும்பு - கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில்  ரூபா .20,000 மதிப்புள்ள பழங்களை ஏற்றிய தள்ளு வண்டியை திருடியதாக புகார் வந்ததையடுத்து, சி.சி.டி.வி கமரா வீடியோவை அவதானித்த பொலிசார் ஞாயிற்றுக்கிழமை (23) குறித்த நபரை கைது செய்துள்ளனர். 

குறித்த சி.சி.டி.வி கமரா வீடியோவில் வண்டியைத் தள்ளுவதும், பின்னர் தேவாலயத்தின் அருகே பிச்சை எடுப்பதில் வழக்கமாக ஈடுபட்டுவதும் பதிவாகியுள்ளதை பொலிசார்  கண்டறிந்துள்ளனர்.

வண்டியை தனது வீட்டிற்கு கொண்டு வர ஒரு நபருக்கு ரூ 5,000 கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கடலோர பொலிஸ் குற்றப்புலனாய்வுத் தலைமை அதிகாரி ஜந்த குமாரா தலைமையிலான போலீஸ் குழு விசாரணை நடத்தி வருகிறது

1 comment:

  1. இது ஆச்சரியமான செயலோ அல்லது செய்தியோ அல்ல. கோடீஸ்வரர்கள் மாத்திரமல்ல. பெரும் கல்விமான்கள்கூட தமது "இயல்பு"க்குரிய "தொழில்கள்" கிடைக்காமையின் காரணமாகவும் தமது வேறு வேண்டுதல்களுக்காகவும் அல்லது பொழுதுபோக்கிற்காகவும் இவ்வாறு "பிச்சை" எடுக்கும் "தொழிலை" பரவலாக மேற்கொண்டு வருகின்றனர். பிச்சை எடுப்பதும் ஒரு தொழில்தான். அத்தோடு அது மிகவும் கஷ்டமான தொழிலும் கூட. பத்து ரூபா பணம் பெறுவதற்காக பல நபர்களை பெரும் மரியாதையுடன் அழைக்க வேண்டியும் இருக்கும். கிடைக்கும் கிடைக்காமலும் போகலாம். பொறுமை காக்க பழகிக் கொள்ளல் வேண்டும். பணிவினைக் கற்க வேண்டுமாக இருந்தால் இத் தொழிலைவிட வேறு தொழில் எங்கும இல்லை. எத்தனையோ பணக்காரர்களும் கோடீஸ்வரர்களும் பிச்சை அல்லது தர்மம் கொடுப்பதற்கு தேவைப்படுவோரைத் தேடிக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் பொருத்தமான ஆட்கள்தான் அவரகளுக்குக் கிடைப்பதில்லை. இதனை நம்ப மாடடீர்கள். இலங்கைப் பல்கலைகழகத்தின் புகழ் பெற்ற பேராசிரியர் (எனக்கும் கல்வி கற்பித்தவர்) ஐயா அவரகள் "பிச்சைக்காரர்கள்" பிச்சை எடுக்கும்போது எபபடியான துயரங்களை அனுபவிப்பார்கள். எப்படியான மனோநிலையில் இருப்பார்கள் என்பதை அறிவதற்காக சுமார் மூன்று நாட்களுக்கு மேல் மாறு வேடத்தில் பிச்சை எடுத்து இருக்கின்றார்கள் (நானும் அவரகளுக்கு உதவி செய்தேன் என்பது வேறு கதை) ஆகவே பிச்சை எடுப்பதில் ஈடுபட்டு தற்செயலாக இப்படியானவர்கள் பிடிபட்டால் இவரகளது விடயம் கௌரவமான முறையில் பரிசீலிக்கப்படல் வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவினை இடுகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.