Header Ads



முஸ்லிம்கள் இந்நாட்டுக்காக செய்த தியாகங்களை, சிங்களவர்களுக்கு எடுத்துக்கூறுவது வரலாற்றுக் கடமை


- பர்ஹானா பதுறுதீன் -

முஸ்லிம் எனும் சொற் பதத்திற்க்கு பதிலாக சிங்களவர்கள் முஸ்லிம்களை #மரக்கலே அல்லது "மரக்கலயா" என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்... அதாவது அக்காலத்தில் முஸ்லிம்களின் பிறப்பு பதிவுகளில் #சாதி என்ற பந்தியில் (தற்போது இலங்கைச் சோனகர்" என்று குறிப்பிட்டுள்ள இடத்தில்  #சாதி: "மரக்கலே" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் அவ்வாறான பிறப்பு பதிவுகள் புழக்கத்தில் உள்ளன.

"மரக்கலே" என்று முஸ்லிம்கள் எதற்காக அழைக்கப்படுகின்றார்கள் என்பது பற்றிய வரலாற்றுப் பின்னனியைக் கொண்ட அச் சொல் பற்றிய  விடயத்தையே இங்கு பிரதி செய்து பதிவிடுகிறேன்... 

"மாவ ரெக்க லே" வேறு "மரக்கலே" வேறு..

முஸ்லிம்களை இவ்வாறு அழைக்க காரணம்!

01. "மாவ ரெக்க லே"

இரண்டாம்  ராஜசிங்க மன்னன் ஒல்லாந்தருடன் இடம்பெற்ற யுத்தத்தில் தோல்வி கண்டு பம்பரகம  கிராமத்தின் ஊடாக தப்பிச்செல்லும் போது மறைந்து கொள்வதற்கு பாரியளவிலான மரப்பொந்தொன்றை அவதானித்தார். ஒரு முஸ்லிம் இளம் பெண் மாட்டில்  பால் கறந்து கொண்டிருந்தாள். மன்னர் 2ம் ராஜசிங்கள் அவர்கள் மரப்பொந்தில் ஒளிந்துகொண்டதை முஸ்லிம் பெண் கண்டுகொண்டால். 

ஓல்லாந்தாரிடம் தன்னை இந்த முஸ்லிம் பெண் காட்டிக்கொடுப்பாளோ என்று மன்னர் அஞ்சிக்கொண்டிருந்தார். உடனடியாக அந்த இடத்திற்கு வந்த ஒல்லாந்து படைவீரர்கள் 'ராஜசிங்கன் எங்கே என்று கேட்டார்கள்..? ஆனால் அவளோ மன்னரை காட்டிக்கொடுக்கவும் இல்லை  பொய் சொல்லி பாவத்தை தேடவும் விரும்பவில்லை. அமைதியாக இருந்துவிட்டால். 

கொலைவெறியில் மன்னரைத் தேடிக் கொண்டிருந்த ஒல்லாந்தார்கள் பலதடவைகள் முஸ்லிம் பெண்ணிடம் கேட்டும் அவள் பதில் சொல்லாமையினால் கோபடைந்த ஒல்லாந்து படையினர் முஸ்லிம் பெண்ணை வாளால் கண்டம் துண்டமாக வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்கள். 

ஒல்லாந்து  படைகள்  அங்கிருந்து சென்று பல மனிநேரங்களின் பின்னர் மரப்பொந்தில் மறைந்து கொண்டிருந்த மன்னனர் 2ம் ராஜிசிங்கன் அவர்கள் அதிலிருந்து வெளியேறியதும் இளம் முஸ்லிம் பெண் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில்  கிடந்ததை கண்டதும் அதிர்ச்சியால் அழுதுவிட்டார்கள். 

அவரது வாயில் இருந்துத வந்து முதலாவது வார்த்தை #மாவ_ரெக்க_லே என்பதாகும். அதாவது 'என்னை பாதுகாத்த இரத்தமே' என்று கூறி அந்த பெண் வசித்த  பம்பர கம்மன என்ற கிராமத்தையே அவளது குடும்ப உறுப்பினர்களுக்கு மன்னர் இரண்டாம் இராஜசிங்கன் அவர்கள் சன்னஸ் எனப்படும் சான்றுப்பத்திரத்தில காணி உறுதியாக எழுதிக்கொடுத்தார்கள். இந்த கிராமம் மஹியங்கனை நகருக்கு அருகில் உள்ள முஸ்லிம் கிராமமான பம்பரகம்மன என்று அழைக்கப்படுகிறது.

02. "மரக்கலே"

எமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இளவரசர்கள் இலங்கை வந்தார்கள். 1505ம் ஆண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகை தருவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இளவரசர்கள் இலங்கை வந்துள்ளனர். 

பாய் மரக் கப்பல் அல்லது மரக்கலத்தில் வந்த இவர்களில் ஒருவர் மன்னார் கடல் கரையில் இறங்கியதோடு, அடுத்தவர் பேருவளை மருதானைக்கு அருகில் கரையிறங்கினார். 

பேருவளை பிரதேசத்திற்கு மரக்கலம் அல்லது பாய்மரக்கப்பலில் வந்து இறங்கிய போது அங்கிருந்த சிங்கள மக்கள் அவர்களை கௌரவத்தோடு வரவேற்றார். அந்த ஊர் மக்கள் அவர்களை #மரக்கலேன்_ஆபு_மினிஸ்ஸூ அல்லது மரக்கலத்தில் வருகை வந்த மனிதர்கள் என்று அழைத்தார்கள். 

பிற்காலத்தில் இந்தப் பெயர் திரிபடைந்து #மரக்கல மினிஸ்சு (மரக்கல மனிதர்கள்) என்று அழைக்கப்பட்டார்கள். இலங்கையின் வரலாற்றில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வசிக்கும் பெரும்பாலான இலங்கை முஸ்லிம்கள் பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் இனம் அல்லது Race என்ற பகுதியில் ஸ்ரீலங்கானு மரக்கலே இனம் என்றே குறிப்பிடப்பட்டிருந்து.

இந்த நாட்டுக்கு எமது மூதாதையர்கள் தமது இரத்தத்தை உரமாக கொடுத்து இந்த நாட்டை பாதுகாத்து உள்ளார்கள் என்பதற்கு இந்த வரலாற்றுகள் சான்று.

இந்த நாட்டுக்காக முஸ்லிங்கள் செய்த தியாகத்தை சிங்களவர்களுக்கு எடுத்து கூறுவது முஸ்லிங்களின் கடமையாகும்.

7 comments:

  1. சுவாரசியமான இந்தத் தொடரில் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம்:

    03.  "மொரோக்கோலா"

    வட ஆபிரிக்காவின் பூர்வீகக் குடிகள் 'பர்பர்' என்று அழைக்கப்படுவர்.  இப்பிரதேசத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றான மொரோக்கோ தேசத்தினர் பேருவளைத் துறைமுகத்தை ஐரோப்பியர்களுக்கு வெகு காலத்துக்கு முன்னாலேயே அடைந்து வியாபாரத்துறையில் செல்வாக்குச் செலுத்தி இருக்கின்றனர்.

    மொரோக்கர் என்பதன் சிங்களப் பதமே 'மொரோக்கோலா' என்பதாகும். இதுவே பின்னாளில் 'மரக்கல' என்று மறுவி இருக்கிறது.

    உள்நாட்டு மன்னர்களின் மனங்களைக் கவர்ந்து செல்வாக்குச் செலுத்திய இவர்களின் வியாபாரத் திறமையால் இதுறைமுக நகரம் இவர்களது பூர்வீகக் பெயர் கொண்டு 'பர்பரீன்' என்று அழைக்கப்பட்டது.  

    இத்துறைமுகத்தின் ஊடாகவே இலங்கையில் விளையும் வாசனைத் திரவியங்கள், இரத்தினக்கற்கள் போன்றவற்றின் ஏற்றுமதிகள் அப்போது நடந்துள்ளன.  பிற்காலத்திலேயே ஐரோப்பியர் கொழும்புத் துறைமுகத்தை சர்வதேச வியாபாரங்களுக்காக அபிவிருத்தி செய்துள்ளனர்.

    தற்போதும் பேருவளை மருதானையை அடுத்துள்ள கலங்கரை விளக்குக் கொண்ட தீவும், சுற்றுலாப் பயண ஹோட்டல்,  உதைப்பந்தாட்ட விளையாட்டுக் கழகம் போன்றன பர்பரீன் என்ற பெயரைக் கொண்டு இலங்குகின்றன.

    இந்த பர்பர் பின்னணியைக் கொண்டவர்தான் மொரோக்கோவைச் சேர்ந்த தாரிக் பின் ஜியாட்.  இவர்தான் மொரோக்கோவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலுள்ள கடலைக் கடந்து ஸ்பெயினை 700 வருடங்கள் இஸ்லாமிய ஆட்சியில் வைத்திருக்க வித்திட்ட இளம் வீரத் தளபதி.

    அரபியில் இவரது பெயர் கொண்ட 'ஜபல் தாரிக்'  (தாரிக் கடல்) என்பதை எப்படி ஐரோப்பியர் 'ஜிப்ரால்டர்'  என்று மாற்றினார்களோ அவ்வாறே பர்பரீன் பேருவலையாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.
    நன்றி.  -மஹிபால் எம் பாஸி (பர்பரீன் கீரன்)

    ReplyDelete
  2. உண்மையின் வெற்றி....

    ReplyDelete
  3. Jabal Tharik enraal, Thaarkik malai embathu porul.

    Jabal enraal rabiyil malai enru porull

    ReplyDelete
  4. Brother Mohamed, you are correct. Thank you and enjoy following informations too.

    Burn your boats, said Tariq bin Ziyad while addressing his small army after entering Spain through sea in 711 A.D. The order was instantly followed by his forces despite a huge army of opponents ready to attack them.
    This ultimate trust in Allah and a strong determination to fight for a just cause was aptly demonstrated by Tariq, apparently giving birth to the above-mentioned maxim.
    “My Dear brothers, we are here to spread the message of Allah. Now, the enemy is in front of you and the sea behind. You fight for His cause. Either you will be victorious or martyred. There is no third choice. All means of escape have been destroyed,” he thundered while addressing his forces before the battle began. The victory of Islam following the acts of valor, as well as piety, was imminent.
    Tariq bin Ziyad was a new convert to Islam from the Berber tribe of Algeria. He was said to be a freed slave.
    Islam provided high status even to slaves. Salman Farsi, Bilal ibn Rabah and Zaid ibn Harithah were slaves before being freed during time of the Holy Prophet Muhammad (peace be upon him). Salman Farsi was appointed Governor of Madayen. Bilal was known for his beautiful voice with which he called people to their prayers. Zaid led a force during the Battle of Mauta. Even in the later period, the Mamalik (slaves) ruled Egypt and Qutubuddin Aibak established his dynasty in India and ruled for centuries.
    Tariq bin Ziyad is believed to be belonging to the Ash-Shadaf Berber tribe from North Africa. He was probably born in 50 AH. Historian Ibn Idhari, however, states that he was from the Ulhasa tribe. Ibn Khaldun has written that the Ulhasa tribe was found on both sides of the Tafna river in Tlemcen, Algeria.
    Tariq bin Ziyad is considered to be one of the most important military commanders in the Iberian history. It is said that he saw the Holy Prophet (peace be upon him) in his dream who saying: “Take courage, O Tariq! And accomplish what you are destined to perform.” Then he saw the Messenger of Allah (peace be upon him) and his companions entering Andalus.” Tariq awoke with a smile, and from that moment, he never doubted his victory. He led a small force from Morocco in 711 AD and landed on the high rock which is called Jabal-Al-Tariq (Gibralter) after his name in Spain.

    ReplyDelete
  5. Those Marakkala Muslims who landed in Beruwala are speaking Tamil. They were greeted by Sinhala people according to the article. Where did they learn Tamil from?

    ReplyDelete
  6. நாங்கள் Jaffna Muslim இல் எழுதும் Comments உரியவரகளைச் சென்று அடையுமா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் Mahibal Fassy மற்றும் பர்ஹானா பதுறுதீன் போன்றவரகள் எழுதும் இப்படியான ஆக்கங்கள் எமது இளம் பிள்ளைகளுக்கு மாத்திரமன்றி ஏனையோரின் அறிவுக்கும் விருந்தாக இருக்கும் அல்லவா?

    ReplyDelete
  7. @ Yong Ayya

    விக்னேஸ்வரன்  ஐயா கூறுவது போன்று தமிழ் இலங்கையின் பூர்வீக மொழி.  அதனால்தான் சிங்களம் போல் அல்லாது அது தேசம் எங்கும் பேசப்படுகிறது.  அதற்கு பேருவளையும் ஓர் உதாரணம்.

    மொரோக்கோ, எமன் இன்னும் எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வந்த சிறுத்தொகையினரான  அரேபியர்கள் மூலம் இஸ்லாத்தின் தூதை ஏற்றுக்கொண்ட  கூடுதல் தொகையினராக இங்கு வாழ்ந்த தமிழ் பேசும் புது முஸ்லிம்களோடு அரேபியர்கள் இரண்டரக் கலந்துவிட்டனர். 

    சிங்கள சிற்றரசர்களின் ஆதிக்கத்தின் கீழ் இப்பிரதேசங்கள் இருந்து அவர்களால் வரவேற்கப்பட்டிருந்தாலும் அவ்வினத்தினருடன் திருமண உறவுகள் கொண்டிருந்தாலும் அவர்களுக்கும் முன்னரேயே இங்கு வாழ்ந்தும், இறுதித் தூதரின் வருகையை எதிர்பார்த்தும் இருந்த பூர்வீக - தமிழ் பேசுவோருடன் அனைவரும் மார்க்க ரீதியில் ஒன்றுபட்டிருக்கின்றனர்.  அதனாலேயே தமிழ் நம் தாய் மொழியாக இருக்கின்றது.

    இலங்கையின் முதலாவது முஸ்லிம் பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அப்ரார் மற்றும் அரேபியர்கள் அப்போது வாழ்ந்த அரபு வீதி ஆகியன பேருவளை மருதானையில் இன்றும் பாவனையில் இருப்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியவைகளாகும்.
     

    ReplyDelete

Powered by Blogger.