வெலிக்கடை சிறைக்கு ஹெரோய்ன், சிம், மெமொரி கொண்டுசென்ற பூனை பிடிபட்டது
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பூனை பிடிக்கப்பட்டபோது அதன் கழுத்தில் 1.7 கிராம் ஹெரோய்ன், 2 சிம் அட்டைகள் மற்றும் மெமொரி அட்டை என்பன கட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பூனையை யார்? சிறைச்சாலைக்குள் அனுப்ப முயற்சித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதக்காலமாக தொலைபேசிகளை சிறைச்சாலைகளுக்குள் வீசும் சம்பவங்கள் பூஸா, வெலிக்கடை மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலை பிரதேசங்களில் இடம்பெற்றன.
இவை தோல்வியடைந்த நிலையிலேயே பூனையின் ஊடாக சிறைக்குள் குறி;த்த பொருட்களை கொண்டு செல்லும் உத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
"நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்;
ReplyDeleteஅவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்;
அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை;
அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் -
இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்;
இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்."
(அல்குர்ஆன் : 7:179)
www.tamililquran.com