Header Ads



முஸ்லிம் சமூகம் மறக்க முடியாத, பெண் ஆளுமை ஓய்வு பெறுகிறார்


மாத்தளை ஆமினா தேசிய பாடசாலையின் அதிபர் Faudina Zameek அவர்கள் ஓய்வு பெறுவதாக அறியமுடிகிறது.

மாத்தளை முஸ்லிம் சமூகம் மறக்க முடியாத ஒரு பெண் ஆளுமை இவர்.

பொதுவாக முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்க சரியான பாடசாலைகள் இல்லை.

இது நாடு முழுவதும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்று.

ஆமினாவில் மாணவிகளை சேர்ப்பது குதிரைக் கொம்புதான், ஆனால் சேர்த்து விட்டால் அந்த

மாணவியின் எதிர்காலத்தை பாடாசாலை பொறுப்பேற்றுக் கொள்ளும் என்று உறுதியாக நம்ப முடியும். 

ஆமினா சகல துறைகளிலும் பெண் ஆளுமைகளை மாத்தளை மாவட்டம் முழுவதும் தேவைக்கு அதிகாமாக உருவாக்கி விட்டிருக்கிறது.

இலங்கையிலேயே ஆங்கில  மொழி மூலம் மிக வெற்றிகரமான அடைவுகளுடன் நடத்தப்பட்ட

ஒரு முஸ்லிம் பாடசாலை என்றால் அது மாத்தளை ஆமினாதான்.

கல்வி ரீதியாக மிகப்பெரிய அடைவுகளை ஆமினா மாணவிகள் பெற்றுக்கொண்ட அதே நேரத்தில்

ஆளுமையுள்ள, பண்பாடுள்ள ஒரு பெண் சமூகத்தை உருவாக்குவதில் அதிபர் Faudina வின் பங்களிப்பு அளப்பரியது.

இயல்பாகவே தலைமத்துவப் பண்புள்ள அமையப் பெற்ற அதிபர் பவுடீனாவின் ஆங்கிலப் புலமை வியக்கத்தக்கது.

மாணவர்களை கல்வி ரீதியாக சரியாக வழிநடத்துவதுடன்  நின்றுவிடாமல்  பெளதீக ரீதியாகவும் தன்நிறைவடைந்த பாடசாலையாக ஆமினாவை மாற்றியிருக்கிறார்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மட்டுமில்லாது தனது ஆசிரியர்களின் தகுதிகளை, திறமைகளை அதிகரிக்கச் செய்வதிலும் கூடிய கவனம் செலுத்தி  அதில் வெற்றியும் கண்டவர் அதிபர் Faudina.

தான் ஓய்வுபெறும்போது மாத்தளை முஸ்லிம் சமூகத்துக்கு  ஒரு தரமான பெண்கள் பாடசாலையை உருவாக்கிக் கொடுத்துவிட்டு  செல்லும் பாக்கியம் பெற்ற அதிபர் இவர்.

குற்றச் சாட்டுகள், எதிர்ப்புகள், விமர்சனங்கள் இவை அனைத்தையும் தாண்டி ஒரு தரமான  தேசியப் பாடசாலையை நடத்துவதென்பது  சாதராண விடயமல்ல. 

அதில் வெற்றிகண்ட அதிபர் Faudina வுக்கு தனது ஓய்வுகாலத்தை திருப்தியுடன் கழிக்க  ஒரு சமூகத்தின் வாழ்த்தும்,பிரார்த்தனையும் இருக்கிறது.

Safwan Basheer 


2 comments:

  1. We salute to this great principal who as elucidated above has contributed immensely to the advancement of education specially among female sector. We are much grateful for the principal for her untiring work for which Allah subhanahu Tala will definitely grant her health,wealth and eternal pleasure. May Allah bless her with years long life and health and wealth. Ameen.

    ReplyDelete

Powered by Blogger.