மேலும் ஊடகவியலாளர்கள், தேர்தல் களத்தில்
பத்திரிகை ஊடகவியலாளர் சுஹைல், தொலைக்காட்சி ஊடகவியலாளர் பிஸ்ரின் ஆகியோரை அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிடச் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
கண்டியில் சுஹைல்
தேசிய பத்திரிகையொன்றின் செய்தி ஆசிரியராக இருக்கும் கண்டியைச் சேர்ந்த சுஹைலை அம்மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடச் செய்வதற்கு ஒரு கட்சி அனுகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவர் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத நிலையில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அவரை போட்டியிடச் செய்வதற்கு பிரதான கட்சியொன்றும் சுயாதீன குழுவொன்றும் முயற்சித்து வருவதாக அறிய முடிகின்றது.
ஏற்கனவே, கண்டி மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் முஸ்லிம் வேட்பாளர்கள் 14 பெயரடங்கிய பட்டியலொன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதில் பத்திரிகையாளர் சுஹைலின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் பிஸ்ரின்
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் தயாரிப்பாளரும் இளம் ஊடகவியலாளருமான பிஸ்ரின் முஹம்மத் அநுராதபுரம் மாவட்டத்தில் தேர்தலில் களமிறக்க இரண்டு பிரதான கட்சிகளிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எந்தவித குடும்ப அரசியல் பின்னணியுமற்ற பிஸ்ரின் முஹம்மத் இந்த விடயத்திற்கு இதுவரை பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஊடக பயிற்றுவிப்பாளரும் தேசிய சர்வதேச விருதுகளை பெற்ற ஊடகவியலாளருமான பிஸ்ரின் முஹம்மத் ஏற்கனவே முஸர்ரபுடன் இணைந்து தொலைக்காட்சி ஊடகத்துறையில் பணியாற்றியவராவார் என்பதும் கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர்ந்த தேசிய ஊடகங்களில் இன்னும் பல தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தேர்தலில் நிறுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்ன செய்ய இலங்கையின் அரசியல் கலாச்சாரம் தகைமையின் அடிப்படையிலல்லாது வெறும் பிரபலம், பிறழ்பணம், ரவுடியிசம் போன்றவற்றின் பின்னால் செல்வதாயிற்றே!!!!
ReplyDelete