Header Ads



இன அரசியலை கைவிட்டு, தேசிய ரீதியில் செயற்பட அலிசப்ரி அழைப்பு

(அஸ்ரப் ஏ சமத்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பிணராக தெரிபு செய்யப்பட்டதனை அடுத்து கொழும்பு  வாழைத்தோட்டத்தில்   உள்ள் நியாஸ் மௌலவியின்  அரபிப் பாடசாலையில்  துஆப் பிராத்தனை இடம் பெற்றது. அத்துடன்  கொழும்பு புதுக்கடை சந்தியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனையின்  முஸ்லிம் இளைஞா் அமைப்பினால்  வரவேற்பு வைபவம்  பாற்சோறு பரிமாறல்  நிகழ்வுகளும் நடைபெற்றன.  

இங்கு உரையா்ற்றிய  அலி சப்ரி

ஸ்ரீலஙகா பொதுசன பெரமுனைக்கு முஸ்லிம்கள் கனிசமான வாக்குகள் அளிக்காவிட்டாலும்,  இன மத கட்சி நிற பேதமின்றி ஜனாதிபதியவாகள்  தேசிய பட்டியலில் மூன்று  முஸ்லிம்  பாராளுமன்ற  உறுப்பிணா்களை நியமித்துள்ளாா். இதில் இருந்து நீங்கள் அவரை புரிந்து கொள்ளமுடியும் அவரது சீரான அரசியல் நிர்வாகம் ஜாதி மத இன பேதமற்ற ஒரு தலைவா்.   இனி நாம் உணா்ச்சிபூர்வமான இன ரீதியான அரசியலை விட்டு விட்டு தேசிய ரீதியில் நாம் செயல்படல் வேண்டும். வட கிழக்கு தவிா்ந்த ஏனைய பிரதேசங்களான கம்பாந்தோட்டை தொட்டு குருநாகல் வரையிலான பல  சிங்களப் பிரதேசங்களோடு பின்னிப் பினைந்து முஸ்லிம் குக் கிராமங்கள் உள்ளன.. அவா்களது கல்வி, வாழ்வதாரம்,  வாழ்க்கைத்தரம்  முன்னேற்றம் அடைவதற்கு  நாம் தேசிய ரீதியிலான அரசியலே நமக்கு தேவையாக உள்ளது.  என அலி சப்றி அங்கு உரையாற்றினாா்.  இவ் வைபவத்தில் மௌலவி தாஸீம், நியாஸ் மௌலவியின் புதல்வர்  குமைர் மௌலவி ஆகியோா்களும் கலந்து கொண்டு துஆப் பிராத்தனையிலும் ஈடுப்ட்டனா்.

No comments

Powered by Blogger.