Header Ads



எமக்கு அரசியல் பழிவாங்களில் ஈடுபட நேரமில்லை, புதிய அரசியலமைப்பை நிறுவ ஒத்துழைப்பு கோரும் பிரதமர்


புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்க, கட்சி பேதங்களைக் கடந்து அனைவரது ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று -25- நடைபெற்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாடாளுமன்றை பொறுத்தவரை, உறுப்பினர்கள் அனைவரும் சிறந்த மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும். இதனை புறக்கணிப்பவர்களுக்கு அரசியல் எதிர்காலமொன்று இருக்காது.

எமக்கு அரசியல் பழிவாங்களில் ஈடுபட தற்போது நேரமில்லை. இதற்காக மக்கள் எமக்கு ஆணையும் வழங்கவில்லை.

" நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்கவே மக்கள், இந்தத் தேர்தலில் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.

எனவே, இதனை நாம் முதலில் நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு என்பது ஒரு தரப்புக்கு மட்டும் உரித்தானது அல்ல. உண்மையில் இதன் ஒவ்வொரு சரத்தும், எமது வாழ்க்கையை தீர்மானிக்கும்.

அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும், கட்சி பேதங்களைக் கடந்து தேவைப்படுவது எமது அரசியல் பொறுப்பாக உள்ளது. இதுதான் மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்” என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.