மகிந்த என்பவர் இந்த நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் - அவரின் சேவைக்கு நன்றிகடன் செலுத்த முடியாது
மகிந்த ராஜபக்ச என்பவர் இந்த நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் என பரம்பரை பரம்பரையாக நாடு முழுவதும் சிலைகளை நிர்மாணித்துள்ளதாலும் நாட்டு மக்களுக்கு அவர் செய்த சேவைக்கு நன்றி கடனை செலுத்தி முடிக்க முடியாது என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தவறியேனும் நீங்கள் மெதமுலவின் உங்களது பயணத்தை நிறுத்தி இருந்தால், நாடு சென்ற பயணத்தை மீண்டும் நிறுத்த முடியாமல் போயிருக்கும்.
ஒரு நாள் நான் மிரிஸ்வெட்டி தேரருடன் களனி விகாரையில் இருந்த போது நீங்கள் சிங்கத்தை போல் வந்தீர்கள்.
அப்போது அதோ சிங்கம் ஒன்று வருகிறது என்று மிரிஸ்வெட்டிய தேரர் கூறினார். அப்போது மகிந்த என்பது சிங்கம் அல்ல, கலாச்சாரம், நாகரீகம் என்று நான் கூறினேன்.
மகிந்த ராஜபக்ச என்பது நாட்டில் உள்ள மக்கள் கற்க வேண்டிய, எதிர்காலத்தில் வாசிக்க வேண்டிய பாத்திரம் எனவும் அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சிந்தனைகள் உண்மையில் நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும்,நாட்டின் தேசியத்தை வலுப்படுத்தவும் உதவி செய்யுமா?
ReplyDelete