Header Ads



பாராளுமன்றத்தில் ரணில் இல்லாத, குறையை சுட்டிக்காட்டிய அதாவுல்லா..!

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சம்பிரதாயப்படி கூடியுள்ள ஒன்பதாவது பாராளுமன்ற அமர்வுகளில் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. எனினும் அரசியல் அனுபவமும் சிரேஷ்டத்தன்மையும் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய சபையில் இல்லை என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லா சபையில் சுட்டிக்காட்டினார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சம்பிரதாய சபை அமர்வுகள் இன்று காலை கூடிய வேளையில் கட்சி தலைவர்கள் உரையின் போதே அதாவுல்லா இதனை சுட்டிக்காட்டியிருந்தார். அவர் இதில் கூறியதானது,

பிரதமர், முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் மற்றும் பல சிரேஷ்ட அனுபவமிக்க தலைவர்கள் இன்று சபையில் உள்ளனர். அது மகிழ்ச்சியளித்தாலும் கூட ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையில் இல்லை.

அதேபோல்  இந்த நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பொன்று  வேண்டும் என்பதே எம் அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. நாட்டில் இன, மத முரண்பாடுகள் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் அரசியல் அமைப்பொன்றை  உருவாக்கிக்கொள்ள இந்த பாராளுமன்றத்தை அரசியல் அமைப்பு சபையாக மாற்றியமைத்து விரைவில் நாட்டிற்கு ஏற்ற நல்லதொரு அரசியல் அமைப்பினை முன்வைக்க வேண்டும் என்றார்.

1 comment:

  1. அவரால் அவருக்கு அவராகவே வெட்டிக்கொண்ட படுகுழியில் முகங்குப்பற விழுந்துள்ளார். சரிதானே?

    ReplyDelete

Powered by Blogger.