பாராளுமன்றத்தை விட அதற்கு வெளியிலிருந்து, சேவை செய்வதைச் சிறப்பாகக் கருதுகின்றேன் - பசில்
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி புதிய அரசியலமைப்பை உருவாக்குமாறு மக்கள் எமக்கு ஆணை வழங்கியிருக்கின்றனர். எனவே புதிய அரசியலமைப்பிற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை விட அதற்கு வெளியிலிருந்து சேவை செய்வதைச் சிறப்பாகக் கருதுகின்றேன். எனினும் தேவை ஏற்படின், நான் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அது பற்றி சிந்திக்கலாம். ஆனால் வெளியிலிருந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவதையே விரும்புகின்றேன்.
அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்காகவே மக்கள் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர்.
அதற்காகவே நாமும் மக்களிடம் மூன்றில் இரண்டைக் கோரினோம். எனவே அதனைச் செய்யாவிடின் மூன்றில் இரண்டைப் பெற்றது அர்த்தமற்றதாகிவிடும்.
பாராளுமன்றத்தில் 113 என பெரும்பான்மை கிடைத் திருந்தாலே எமக்கு போதுமானது.
ஆனால் 150 என்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கிய புதிய அரசியலமைப்பை உருவாக்குமாறு மக்கள் எமக்கு ஆணை வழங்கியிருக்கின்றனர்.
எனவே புதிய அரசியலமைப்பிற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என பசில் தெரிவித்தார்.
Post a Comment