Header Ads



தான் கைதாவதை தடுக்கும் ரிஷாத்தின் மனு - நீண்ட பரிசீலனையின் பின்னர் நிராகரிப்பு

தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

புவனெக அலுவிகாரே, எல்.டீ.பீ தெஹிதெனிய மற்றும் எம்.துரைராஜா ஆகிய முவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுவை ஆராய்ந்த சந்தர்ப்பத்தில் ஆட்சேபனை தெரிவித்த சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரீன் புல்லே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை சிக்கலானது எனவும், மனுதாரரின் கோரிக்கைக்கு அமைவாக தடையுத்தரவு வௌியிடப்பட்டால் விசாரணை செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தடங்கலாக அமையும் எனவும் குறிப்பிட்டார். 

பின்னர், நீண்ட பரிசீலனையின் பின்னர் குறித்த மனு விசாரணைக்கு அனுமதி வழங்கும் அளவிற்கு போதுமான சட்ட ஏற்பாடுகள் வௌிப்படாததால் அதனை நிராகரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

1 comment:

Powered by Blogger.