Header Ads



நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த, அரசுடன் சேர்ந்து பயணிக்க தயார் - சம்பந்தன்

- ஹஸ்பர் ஏ ஹலீம் -

நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுடன் சேர்ந்து பயணிக்க தயார் _தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 

நடந்து முடிந்த 2020ம் ஆண்டு பொது தேர்தலில் 09 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று வெற்றி ஈட்டியதை தொடர்ந்து நேற்று(07) திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் விசேட பூசைகள் இடம் பெற்றது .இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஊடகங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில்

 இம்முறை இடம் பெற்ற தேர்தல் ஒரு ஜனநாயக தேர்தலாக நான் கருதவில்லை. 

மக்களுக்கு பணம் வழங்கி நன்கொடை கொடுத்து  மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களை பெற்று கொண்டுள்ளனர். 

சிறிய சிறிய தமிழ் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை பிரித்து உள்ளனர் இதனால் 20 ஆசனங்கள் எதிர்பார்க்க பட்டு 09 ஆசனம் பெற்று வெற்றியீட்டியுள்ளோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

மேலும் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த நீதியும் மற்றும் கெளரவமான பிரஜையாக வாழ தீர்வு வழங்கப்பட வேண்டும் . அதில் நாம் உறுதியாக உள்ளோம் ஆனால் ஆட்சி அமைக்கும் அரசின் நிலைபாட்டை கொண்டு எமது இலட்சியத்தை அடைவோம் எனவும், இதற்கு இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என நான் நினைக்கின்றேன் அதற்கான கருமங்களை ஆக்கபூர்வமான விதத்தில் நாங்கள் முன்னெடுத்துச்செல்வோம் என்றார்.


1 comment:

  1. ஒன்றும் நடக்காது ஐயா அடுத்த ஐந்து வருடங்கள் எதிர் தரப்பில் அடங்கி இருக்க வேண்டிய துதான் சிறுபான்மை கட்சிகள்.

    ReplyDelete

Powered by Blogger.