Header Ads



ஈஸ்டர் தாக்குதல் குறித்து 97 எச்சரிக்கைகள் பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைத்துள்ளன - கமல் குணரத்ன

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு 97 எச்சரிக்கைகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு முகவர்களால் வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்து 97 முறை முன்கூட்டியே எச்சரிக்கைகள் வந்த போதிலும், பொறுப்பானவர்கள் அவற்றின் தீவிரத்தை கவனிக்கவில்லை.

இதன் காரணமாகவே பலர் உயிரிழந்தும், பலர் காயமடைந்த சம்பவமும் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பும், பாதுகாப்பும் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. எனவே அவற்றைப் பாதுகாக்காமல் ஒரு நாட்டை முன்னேற்றவும் அபிவிருத்தி செய்யவும் இயலாது என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதியின் தேர்தல் அறிக்கையின்படி நாட்டின் பாதுகாப்பை நோக்கிய பார்வையில் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துவதே மூலக்கல்லாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது கருத்துரைத்த பாதுகாப்பு செயலாளர் இதனை கூறியுள்ளார்.

2009 மே இல் பிரிவினைவாதம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், தமிழ் புலம்பெயர்ந்தோரின் ஒரு சிலர் தொடர்ந்து நிதியுதவி அளிக்கும் பிரிவினைவாத சித்தாந்தத்தை அகற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் வடக்கிலிருந்தோ அல்லது கிழக்கிலிருந்தோ தீவிரவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் மேஜர் ஜெனரல் குணரத்ன கூறினார்.

1 comment:

  1. 'முஃமின்களே!

    நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள்,

    எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்.

    நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;

    அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்;

    நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.'

    (அல்குர்ஆன் : 5:8)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.