குருநாகலில் 930 வாக்குகளினால், இழக்கப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம்
- Anzir -
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 2 முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கினர்
அவர்களில் ரிஸ்வி ஐவகர்சா 48,413 வாக்குகளை பெற்றுள்ளார்.
இவருக்கு முன்னதாக பட்டியலில் இருந்த, துசார அமரசேன 49,343 வாக்குகளை பெற்று பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளார்.
இதன்மூலம் ரிஸ்வி ஐவகர்சா 930 வாக்குகளினால், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளார்.
But in Kurenegala more than 100000 Muslim votes no?
ReplyDeletedivided and you all lost. Greedy and no common sense for these people.
ReplyDeleteIt is very sad to hear. I think other muslim candidate has not co-operated to get muslim representation in the district. Those who have not voted for you will realise so do not give up.
ReplyDeleteபௌத்த பிரதிநிதிகள் பத்து நபர்கள் குறைநதாலும் சிறுபான்மையினரில் ஒருவர் குறைவது பெரும் இழப்புத்தான்.
ReplyDeleteகுர்நாகல் மாவட்டத்தில் 8% முஸ்லிம்கள் வாழ்கின்றனர். சுமார் 107, 902 முஸ்லிம் வாக்காளர்கள் அங்குண்டு. 1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அஹமட் ஹசன் முஹமர் அலவி என்பவர் 52,381 விருப்பு வாக்குகளை பெற்று UNP கட்சியில் வெற்றி பெற்றிருந்தார். அதன் பின்னர் எந்த ஒரு பொதுத் தேர்தலிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் வெற்றி பெறவில்லை. இந்த முறை SJB கட்சியில் போட்டியிட்ட ரிஸ்வி ஜவகர்சா 48,413 விருப்பு வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். புத்தளத்தை போன்று குரநாகலை மாவட்டத்திலும் இந்த முறை முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் தனி ஒரு கட்சியில் அல்லது புத்தளம் மாவட்டத்தில் களமிறங்கிய அதே தராசு சின்னத்தில் களமிறங்கி இருந்தால் ரிஸ்வி ஜவகர்சா பெற்ற 48,413 வாக்குகளுக்கே ஓர் ஆசனந்தை பெற்றிருப்பர். மேலும் புத்தளம் + குர்நாகல் மாவட்டங்களில் தராசு பெற்ற ஒரு இலட்சம் வாக்குகளுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்றும் கிடைத்திருக்கும்.
ReplyDeleteகுர்நாகலையில் மொட்டு பெற்ற வாக்குகள் 649,965 , டெலிபோன் ரிஸ்வி ஜவகர்சாவின் விருப்பு வாக்களுகள் நீங்களாக பெற்ற வாக்குகள் 196,447, ரிஸ்வி ஜவகர்சாவின் வாக்குகள் 48,413 வேறு எந்த கட்சிகளும் 5% இற்கு மேல்
வாக்குகளை பெறவில்லை. ஆக மொத்தம் 15 ஆசனங்களில் போனஸ் ஆசனம் நீங்களாக முதல் சுற்றில் ஓர் ஆசனத்தை பெறுவதற்கான வாக்குகள் 894,825/14= 63,916 ஆக மொட்டு 10.16 ஆசனங்களையும் டெலிபோன் 3.07 ஆசனங்களையும் பெற ரிஸ்வி ஜவகர்சா 0.75 ஆசனங்களை பெற்றிருப்பார். ஆக ரிஸ்வி ஜவகர்சா தனித்து இறங்கி இருந்தால் மொட்டு 11 ஆசனங்களையும், டெலிபோன் 3 ஆசனங்களையும், ரிஸ்வி ஜவகர்சா வின் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றிருக்கும்.
இது போன்றுதான் கொழும்பு, கண்டி மாவட்டங்களில் முஸ்லிம்கள் தனி கட்சிகளில் போட்டியிட்டு இருந்தால் இரண்டு அல்லது 3?ஆசனங்களுடன் தேசியப்பட்டியலில் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றிருப்பர். இனவாத பௌத்த கட்சிகளுக்கு தேசியப்பட்டியல் ஆசம் செல்வதனையும் தடுத்திருப்பர்.
மர்ஹும் அஷ்ரப் வெட்டுபுள்ளியை 12.5% இல் இருந்து 5% ஆக்கியதன் பிரதான நோக்கம் தென் இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இனங்கள் சொந்த கட்சிகளில் போட்டியிட்டு யாரது கட்டளைகளுக்கும் செயலாற்றாது தம் சொந்த காலில் நின்று ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களுகாய் குரல் கொடுக்க வேண்டும், பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே....