கன்னி அமர்வுக்காக புதிதாக, பாராளுமன்றம் செல்லவுள்ள 81 பேர் (முழு விபரம்)
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வில் முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதிதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர். அதனைத் தொடர்ந்து அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்கள்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நாளை இடம்பெறும் முதலாவது அமர்வில் 81புது முகங்கள் சபையில் அமரப்போகின்றனர். நடந்துமுடிந்த பொதுத் தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் புதிய உறுப்பினர்கள் 65பேர் மக்களின் வாக்குகளினால் தெரிவாகி இருக்கின்றனர். அதுவல்லாமல் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்கு விகிதாசாரத்தின் அடிப்படையில் பெற்றுக்காெண்ட தேசிய பட்டியலில் இருந்து இதுவரை 16பேர் பெயரிடப்பட்டிருக்கின்றனர்.
தேசிய பட்டியல் தெரிவாகி இருக்கும் புதிய உறுப்பினர்கள் 16பேரில் 12பேர் பொதுஜன பெரமுன கட்சியினால் பெயரிடப்பட்டவர்களாகும். ஏனைய 4பேரும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசு கட்சி,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒவ்வொரு உறுப்பினர்களாகும்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எமது மக்கள் சக்தி கட்சிகளுக்கு தேசிய பட்டியலில் ஒரு உறுப்பினர் அடிப்படையில் கிடைக்கப்பெற்றன.
இதே வேளை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கண்ணி அமர்வில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எமது மக்கள் சக்தி கட்சி ஆகியன இதுவரை தமது உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கவில்லை. அதனால் இந்த இரண்டு ஆசனங்களும் நாளை சபையில் வெறுமையாக இருக்கும்.
மாவட்ட அடிப்படையில் கட்சிகள் ஊடாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 65புதிய உறுப்பினர்களான,
பொதுஜன பெரமுன, கொழும்பு மாவட்டம்
பிரதீப் உதுகொட, மதுர விதானகே,பிரேமனாத் சீ. தொலவத்த, ஜகத் குமார,
களுத்துறை மாவட்டம் , சங்ஜீவ எதிரிமான்ன,அனுப பெஸ்குவல்,லலித் எல்லாவல
கம்பஹா மாவட்டம், நாலக்க கொடஹேவா, சஹன் பிரதீப் விதான,கோகிலா ஹர்ஷணி குணவர்த்தன, நலின் ருவன்ஜிவ பெர்னாந்து, மிலான் சஜித் ஜயதிலக,உபுல் மஹேந்திர ராஜபக்ஷ்.
கண்டி மாவட்டம், வசன்த்த யாப்பா பண்டார,குணதிலக்க ராஜபக்ஷ், உதயன சமிந்த கிரிந்தகொட.
நுவரெலியா மாவட்டம், ஜீவன் தொண்டமான்,மருதபாண்டி ராமேஷ்வரன், நிமல் பியதிஸ்ஸ.
ஐக்கிய மக்கள் சக்தி, மயில்வாகனம் உதயகுமார்.
மாத்தளை மாவட்டம், நாலக்க பண்டார கோட்டேகொட,பிரமித பண்டார தென்னகோன்.
காலி மாவட்டம், சம்பத் அதுகோரள,இசுறு தொடங்கொட,ஷான் விஜயலால்த சில்வா.
மாத்தறை மாவட்டம், நிபுண ஆர், ரணவக்க,கருணாதாச கொடிதுவக்கு, வீரசுமன வீரசிங்ஹ
அம்பாந்தோட்டை மாவட்டம், உபுல் கலப்பத்தி, அஜித் ராஜபக்ஷ்
அனுராதபுரம் மாவட்டம், கலாநிதி சன்ன ஜயசுமன,உத்திக்க பிரேமரத்ன,எச்.நந்தசேன,கே.பி.எஸ். குமாரசிறி
ஐக்கிய மக்கள் சக்தி, ராேஹண பண்டார விஜேசுந்தர
பொலன்னறுவை மாவட்டம், அமரகீர்த்தி அதுகோரள.
ஐக்கிய மக்கள் சக்தி, கிங்ஸ் நெல்சன்
திருகோணமலை மாவட்டம், கபில அதுகோரள.
மட்டக்களப்பு மாவட்டம், தமிழ் மக்கள் விடுதலை புலிகள், சிவநேசதுறை சந்திரகாந்தன்,
இலங்கை தமிழ் அரசு கட்சி, சாணக்கிய ராஹுல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அஹமட் நசீர்
திகாமடுள்ள மாவட்டம், பொதுஜன பெரமுன, டீ.சீ.வீரசிங்ஹ, திலக் ராஜபக்ஷ்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மொஹமட் முஷாரப்
பதுளை மாவட்டம், பொதுஜன பெரமுன, மேஜர் சுதர்ஷன் தெனிபிடிய, ஷாமர சம்பத் தசநாயக்க, ஜனக்க திஸ்ஸகுட்டி ஆரச்சி.
மொனராகலை மாவட்டம், பொதுஜன பெரமுன, ஷஷீந்திர ராஜபக்ஷ், குமாரசிறி ரத்நாணக்க, வைத்தியர் கயாஷான் நவநந்த,
ஐக்கிய மக்கள் சக்தி, தர்மசேன விஜேசிங்ஹ
இரத்தினபுரி மாவட்டம், காமினி வலேபொட, அகில எல்லாவல, முதித்தா பிரஷான்தி சொய்சா.
கேகாலை மாவட்டம், ராஜிக்கா விக்ரமசிங்ஹ, எல்.எம். சுதத் மங்சுள, உதயகான்த குணதிலக்க
வன்னி மாவட்டம், ஈழமக்கள் ஜனநாயக கட்சி, குலசிங்கம் திலீபன்
யாழ்ப்பாணம் மாவட்டம், தமிழ் மக்கள் தேசிய முன்னணி, சீ.வி.விக்னேஸ்வரன்
புத்தளம் மாவட்டம், பொதுஜன பெரமுன, சின்தக அமல் மாயாதுன்ன
முஸ்லிம் தேசிய முன்னணி, அப்துல் அலி சப்ரி
குருணாகலை மாவட்டம், பொதுஜன பெரமுன, கலாநிதி குணபாலரத்னசேகர,அசங்க நவரத்ன, சமன்பிரிய ஹேரத், யூ.கே.சுமித் உடுகுபுர ஆகியோராவர்.
இதேவேளை, கட்சிகளின் தேசியப் பட்டியல் மூலம் பெயரிடப்பட்டிருக்கும் புதிய உறுப்பினர்களான,
பொதுஜன பெரமுன, சட்டத்தரணி சாகல காரியவசம், அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்ஹ, மங்ஜுளா திஸாநாயக்க, சிரேஷ்ட பேராசிரியர் ரங்ஜித் பண்டார, பேராசிரியர் சரித்த ஹேரத்,கெவிந்து குமாரதுங்க,யதாமிணி குணவர்த்தன, கலாநிதி சுரேன் ராகவன், விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல, மொஹமட் பழீல் மர்ஜான்,
ஐக்கிய மக்கள் சக்தி, டயனா கமகே. இலங்கை தமிழ் அரசு கட்சி, தவராஜா கைலை அரசன். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், செல்வராசா கஜேந்திரன், தேசிய மக்கள் சக்தி, கலாநிதி ஹரினி அமரசூரிய
Post a Comment