பாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்
பாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன.
01. பொதுஜன முன்னணி
02. ஐக்கிய மக்கள் சக்தி
03. இலங்கை தமிழரசுக் கட்சி
04. தேசிய மக்கள் சக்தி
05. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
06. ஈழமக்கள் ஜனநாயகக் காங்கிரஸ்
07. தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
08. முஸ்லிம் தேசிய கூட்டணி
09. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
10. தேசிய காங்கிரஸ்
11. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
12. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
13. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
இவர்களில் பெரும்பாலும் நால்வரே பெரும்பான்மை சிங்கள இனத்தை சேர்ந்தவராக இருப்பர். மிகுதி ஒன்பது பேரும் சிறுபான்மை சமூகத்தவர்களாவர். அதிலும் சுதந்திரக் கட்சிக்கு கட்சித் தலைமை அந்தஸ்த்தை பெற்றுக்கொடுத்தவர் யாழ்ப்பானத்தில் வெற்றிபெற்ற தமிழ் வேட்பாளர் ஒருவராவார்.
ஐந்து தமிழ் கட்சித் தலைமைகளும் நான்கு முஸ்லிம் தலைமைகளும் நான்கு சிங்கள தலைமைகளும் பாராளுமன்றில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை பெற்றுக்கொள்வர்.
ஆளும் பொதுஜன முன்னணிக்கு ஆதரவாக ஈழமக்கள் ஜனநாயகக் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலை புலிகள், தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன இருக்கப் போகின்றன.
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக முஸ்லிம் தேசிய கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் செயற்படும் என எதிர்ப்பார்க்கலாம்.
தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி என்பன எப்போதும் சுயாதீனமாக தனித்தே செயற்படுவர் என எதிர்ப்பார்க்கலாம்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
SNM Suhail
POIYANUKAL, EMAATRUKAARANUKAL,
ReplyDeleteMUSLIMGALIN VAAKKUKALAI KOLLAIYADITHU
DHUHANDIYAAKA VAALVAANUKAL.