Header Ads



பிரசவத்திற்கு இலங்கை வரமுடியாத பெண், 3 குழந்தைகளை பெற்றெடுத்தார்

கோவிட் முடக்குதல் காரணமாக நாடு திரும்ப முடியாதிருந்த புலம் பெயர்ந்த இலங்கைத் தொழிலாளரான கற்பினித்தாய் ஓமானில் மூன்று குழந்தைகளைப் பிரசவித்தார். இந்த அரிய சத்திர சிகிச்சையை மேற்கொண்ட பிரபல மகப்பேற்று வைத்தியர் தாஹிரா கஸ்மி அவர்களை ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் கௌரவித்தார். 

கோவிட் வைரஸ் பரவலால் உருவான பிரயாணத் தடைகள் காரணமாக தனது பிரசவத்துக்காக இலங்கை செல்ல முடியாது சிரமப்பட்ட மூன்று குழந்தைகளைச் சுமந்த கற்பினித்தாயான றுவந்திகா திலினி அவர்களின் பிரசவ சத்திர சிகிச்சை மற்றும் வைத்திய வசதிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மேற்கொண்டு இருந்தார். 

ஓமானிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனை மிகச் சிறந்த முறையில் கவனிக்கின்ற ஓமான் நாட்டின் மாட்சிமைமிக்க அரசர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களுக்கும் அவர்களின் அரசாங்கத்துக்கும் இப் பிரசவத்தை வெற்றிகரமாகவும் சுமுகமாகவும் மேற்கொள்ளுவதற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிய ஓமான் சுகாதார அமைச்சகத்துக்கும் “தார் அல் அதா” தொண்டு நிறுவனத்துக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை இலங்கைத்தூதுவர்அமீர் அஜ்வத் தெரிவித்துக் கொண்டார்.

( மனாஸ் ஹுசைன் )

No comments

Powered by Blogger.