Header Ads



நாடாளுமன்றம் 20 ஆம் திகதி கூடுகிறது - பெயர்களை ஆன்லைனில் பதிவு செய்ய நடவடிக்கை

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை ஆன்லைனில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறும் என்று தலைமை சார்ஜென்ட் ஆர்ம்ஸ் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரும் தொடங்குவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்யப்படுகிறார்கள்.

இது முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களால் செய்யப்பட்டிருந்தாலும், நாட்டின் தற்போதைய சுகாதார நிலையை கணக்கில் கொண்டு ஆன்லைனில் இவ்வாறு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றின் அமர்வு எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று தலைமை சார்ஜென்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.