Header Ads



18 கிராம் போதைப் பொருளை, தன்வசம் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை

18 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்து விற்பனை செய்த குற்றத்தை எதிர்நோக்கிய நபர், செய்த குற்றம் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த நபருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கனேபொல இன்று தீர்ப்பளித்துள்ளார்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயதான கயான் இந்திரஜித் என்ற குற்றவாளிக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர், குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

2013 ஆம் ஒக்டோபர் 30 ஆம் திகதி கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கிராண்ட்பாஸ் கொஸ்வத்தை சந்தியில் உள்ள பொது சந்தைக்கு அருகில் சோதனையில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சட்டமா அதிபர் கடந்த 2014 ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார்.

குற்றவாளி கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து 121 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதில் 18 கிராமுக்கும் மேற்பட்ட தூய ஹெரோயின் அடங்கி இருந்ததாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.