UNP யிலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்
கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அக்கட்சியிலிருந்து விலகி எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் 54 பேரினதும், கட்சியிலிருந்து விலகி அல்லது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயற்படும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் 61 பேரினதும் - மொத்தமாக 115 பேரின் உறுப்புரிமை இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
உறுப்புரிமை இரத்துச்செய்யப்பட்ட அனைவருக்கும் அதுகுறித்த கடிதம் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டது.
இந் நிலையிலேயே தற்போது மேலும் 37 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் தம்மை இந்த பெரும் கட்சிகளில் இருந்து நீக்கிக்கொள்ளல் வேண்டும், முஸ்லிம்கள் நல்லவர்களை (இருக்கும் அணைத்து பாராள மன்ற உறுப்பினர்களை தவிர்த்து புதிய அறிவுள்ளவர்கள்) தெரிவு செய்ய எப்போது தயாராகுகிறார்களோ அப்போது தீர்மானிக்கும் சக்தியாக இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் மாற்றுவான்
ReplyDelete