பாடசாலை மாணவர்கள், முக்கவசம் அணிய வேண்டுமா..? Dr அனில் அறிவுறுத்தல்கள்
பாடசாலை மாணவர்கள் 6 மணித்தியாலங்கள் பாடசாலை நேரத்திற்குள் தினசரி முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்று ஏற்படும் என சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாடசாலை களில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாட சாலை மாணவர்கள் முக் கவசம் அணிவது கட்டாயமான என கேட்ட போதே சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட சுகாதார விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையில் அதனைத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைக்குச் செல்லும் போதும், வெளியேறும் போதும் முகக் கவசம் அணிவது சிக்கல் இல்லை என சுகாதார வைத்தியர் ஜசிங்க தெரிவித் தார்.
பாடசாலை மாணவர்கள் 6 மணித்தியாலங்கள் பாடசாலை நேரத்திற்குள் தினசரி முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்று ஏற்படும் என கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வந்த பின்னர் தங்கள் முகக் கவசத்தை நீக்கி பாதுகாப்பான வைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
what about other public?
ReplyDelete