" Dr அனில் ஜாசிங்க O/L கணிதப் பரீட்சை எழுத வேண்டுமாம்"
தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்ட அரசாங்கம் மேற்கோள் காட்டிய புள்ளிவிபரங்களை கேலி செய்துள்ள பேராசிரியர் ஒருவர், சுகாதார சேவைகள் பணிப்பாளரை மீண்டும் க.பொ.த சாதாரண தர கணிதப் பாட பரீட்சைக்கு தோற்ற வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளார்.
இலங்கையின் கொரோனா கட்டுப்பாட்டு வெற்றியைக் காண்பிப்பதற்காக 130,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கடந்த வாரம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் முன்னாள் பேராசிரியரான சிசிர பின்னவல இந்த தகவலை சமூக ஊடகங்களில் கேலி செய்ததோடு, சுகாதார சேவைகள் பணிப்பாளரை ”மீண்டும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற வேண்டுமென” பரிந்துரைத்துள்ளார்.
”130,000 என்பது மக்கள் தொகையில் 0.6% அல்லது ஒரு மில்லியனுக்கு 5,900 ஆகும். எங்களுடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.7% அல்லது ஒரு மில்லியனுக்கு 138,000 ஆகும். இந்தியா ஒரு மில்லியனுக்கு 0.9 சதவீதம் அல்லது 9,400 ஆக நமக்கு முன்னால் உள்ளது. இந்நிலையில் நாம் வெற்றிகரமாக செயற்பட்டுள்ளோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நினைப்பாராயின், அவர் மீண்டும் க.பொ.த சாதாரண தர கணிதப் பாடப் பரீட்சைக்கு தோற்ற வேண்டும்” என பேராசிரியர் பின்னவல ட்வீட் செய்துள்ளார்.
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் முன்னாள் பேராசிரியரான சிசிர பின்னவல, தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கை பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டுச் செல்ல எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்ட ஆய்வறிக்கையை, சமர்ப்பித்தவர்களில் ஒருவராவார்.
”கொரோனா தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பார்வை” என்ற இந்த ஆய்வை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான இலட்சுமன் கதிர்காமர் நிலையத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி கணேசன் விக்னராஜா ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கற்றறிஞர்கள் என்றும் கற்றறிஞர்களே. இவரகள்தான் என்றும் எம் நாட்டிற்குத் தேவையானவர்கள். கல்வியறிவற்ற சிந்தனாசக்தி குறைந்தவரகளிடம் ஆட்சிப் பொறுப்பினை வழங்காது மக்கள் தாமாகவே கற்றறிந்தாய்வாளர்களை தேடிப் பிடித்து அவரகளிடமே ஆட்சியைப் பொறுப்பினைக் கொடுக்க வேண்டும். ஆனால் இது நடக்காது. ஏனெனில் இதனை நடக்கவிடாது அவரகள் இவரகளை நொண்டியாக்கி விடுவார்கள்.
ReplyDeleteScholars are always scholars. They are the people our country needs forever. Uneducated and low-level thinkers should not be given the responsibilities of governing the people and the country. But this is not going to happen. Because they will cripple them (Scholars) if this does not happen.