Header Ads



CID யில் ஆஜராகுமாறு, ரிசாத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆஜராகுமாறு அறிவித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சருக்கு குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இதற்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் குறித்த இரு சந்தர்ப்பங்களிலும் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவில்லை. 

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. 

இதன் பின்னரே அவருக்கு எதிராக அழைப்பானை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

4 comments:

  1. முஸ்லிம்களே...

    இலங்கையிலிருந்து , இஸ்லாத்தையும் ,முஸ்லிம்கலையும் இல்லாமலாக்க துடிக்கும் சக்த்திகளை இழிவாக்கி பலவீனப்படுத்துமாறு இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்தியுங்கள்.

    அல்லாஹ் எமக்கு போதுமானவன்.

    ReplyDelete
  2. How many times they investigation him?Why don´t make completly investigation they one times. Rajapakse surounds very racist dogs and extrimies.

    ReplyDelete
  3. இவர்கள் அக்கிரமங்களை அல்லாஹ் எப்போதும் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்கமாட்டான்

    ReplyDelete
  4. It is very unfortunate to see that the govt. machinery and affiliated bodies are used with well planned strategy to revenge the political opponents in order to boost their vote bank, which is nothing but blatant violation of human rights.

    ReplyDelete

Powered by Blogger.