Header Ads



தேடப்பட்டு வந்த நீர்கொழும்பு, சிறைச்சாலை அதிகாரி CID யில் சரண்


பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கல குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (24) சரணடைந்துள்ளார். 

அவர் உள்ளிட்ட மேலும் 3 பேரை கைது செய்யுமாறு நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 22 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது. 

அதன்படி, இவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்துள்ள நிலையில் அவர் நாளை (25) நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.