Header Ads



முஸ்லீம்கள் யாராவது இஸ்லாமிய உடையணிந்து, வீடுவீடாக வாக்கு கேட்டு வருகின்றார்களா - உதயராசா


தமிழன் தமிழனுக்கு வாக்களிக்கின்ற மன நிலையை உருவாக்குங்கள். அதற்குப் பிறகு யாருக்கு என்பதை தீர்மானியுங்கள் என தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளரும்,  சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும் ப. உதயராசா தெரிவித்துள்ளார்.

மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எமக்கு எச்சந்தர்ப்பத்திலும் மாற்று இனத்தவர்கள் வாக்களிக்க மாட்டார்கள். இன்று முஸ்லீம்களுக்காக நீங்கள் வீடு வீடாக சென்று வாக்கு கேட்கின்றீர்கள் அவர்கள் யாராவது இஸ்லாமிய உடையணிந்து கொண்டு வீடு வீடாக வாக்கு கேட்க வருகின்றார்களா இல்லை எல்லாவற்றிற்கும் தமிழ் இளைஞர், யுவதிகளை பயன்படுத்துகின்றார்கள். இந்நிலைமை மாறவேண்டியது காலத்தின் கட்டாயம் இவர்கள் எதைக்கொடுத்தாலும் தமிழன் தமிழனுக்கு வாக்களிக்கின்ற மன நிலையை உருவாக்குங்கள்.

அதற்குப் பிறகு யாருக்கு என்பதைத் தீர்மானியுங்கள்.

இவ்வாறு நேற்று மாலை மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளரும்,  

சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும் ப. உதயராசா தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

நாங்கள் மாற்று இனத்தவருக்கு வாக்களித்து இங்கு மாற்றுக் குடியேற்றங்கள் மேற்கொண்டு வடகிழக்கில் நாங்கள் பெரும்பான்மை இல்லாமலும் இங்கும் நாங்கள் சிறுபான்மை இனத்தவர்களாகவும் ஒரு ஆபத்தான நிலையில் நாங்கள் சென்றடைவோம். அவ்வாறு ஒரு ஆபத்தான நிலை ஏற்பட்டால் இன்று அவர்களுக்காக வாக்குக்கேட்க வந்தவர்கள் நினைத்தாலும் அதனை மாற்ற முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். 

கடந்த 15 ஆண்டுகாலமாக இந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் 90வீதமான தமிழர்கள் வசிக்கின்ற இந்தப்பிரதேசத்தில் ஒரு அபிவிருத்திக்குழுவின் தலைவராகவும் ஒரு அமைச்சராகவும் ரிஷாட் பதியுதீன் இருந்திருக்கின்றார். அதன் விளைவு அவருக்கு பெருமளவு வாக்குகளை பெற்றுக்கொடுத்த தமிழர்கள் செய்த பெரும் தவறு இன்று எங்களுடைய இளைஞர்கள் படித்த இளைஞர் யுவதிகள் ஆடைத் தொழிற்சாலைக்கும், கூலிவேலைக்கும், தங்குவேலைக்கும், கச்சான் பிடுங்குவதற்கும் சென்று கொண்டிருக்கின்றார்கள். 

ஆனால் அவர்களுக்கு எங்களின் பிள்ளைகளைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு குறைந்த தகமை உடையவர்களுக்கும் இன்று அரச வேலைவாய்ப்புக்களை வழங்கி எங்களுடைய பிரதேசத்தில் அவர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்களாகவும், எங்களுடைய பிரதேசத்தில் அவர்கள் கிராமசேவகர்களாகவும் எங்களுக்கு வரக்கூடிய வளங்களை தங்களுக்குரிய மண்வீதிகளை தார் வீதிகளாக மாற்றி இங்கு இருக்கக்கூடிய காடுகளை அழித்து பெறுமதியான இடங்களில் அவர்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுத்து குடியேற்றங்களை செய்துள்ளார்கள்.

நாங்கள் எங்களுடைய வீட்டு தேவைக்கு ஒரு தடி வெட்டினால் எங்களைக் கைது செய்கிறார்கள். அங்கே பல்லாயிரம் ஏக்கரை வெட்டி குடியேற்றம் செய்திருக்கின்றார்கள். அவர்களுக்கு கிடைக்கும் வீட்டுத்திட்டத்தில் காட்டை அழித்து வீட்டைக்கட்டுகின்றார்கள், மின்சாரத்தை வழங்குகின்றனர் வீதியை அமைக்கின்றார்கள்  அதற்குப்பிறகு அவர்கள் அங்கு குடியேறுகின்றார்கள். எங்களுக்கு எவ்வாறு இடம்பெறுகின்றது ஐந்து இட்சத்திற்கு வருகின்ற வீட்டுத்திட்டம் முதற்கட்டமாக ஐம்பதினாயிரம் ஐந்தடியில் அத்திவாரம் வெட்டவேண்டும் அந்த அத்திவாரத்திலே காதில் இருக்கின்றது. மூக்கில் இருக்கின்றது அனைத்தும் போய்விடும் இரண்டாம் கட்டமாக எண்பதினாயிரம் ஒன்று கணவன் அல்லது மனைவி வேலைக்கு செல்லாவிட்டால் அந்த வீட்டில் அடுப்பு எரியாது சிறந்த மேசனைப்பிடித்து வீடு கட்டுவதற்கு பணம்போதாது இவ்வாறு ஐந்து இலட்சம் வீட்டுத்திட்டம் என்று எங்களை வதைத்து அவர்களுக்கு சவுதி , குவைத் கொடுத்தது என்று சொல்லி அந்தச்சிம்மாசனத்தில் மீண்டும் இருந்து கொள்ள தமிழர்களைப் பயன்படுத்துகின்றார்கள். இந்த ஆபத்திலிருந்து நாங்கள் மாறவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. முஸ்லிமகளை அரசியல் வியாபாரப் பண்டம் போன்று பயன்படுத்தும் கேவலமான கையறு நிலையில் மாற்றுச் சமூகத்தில் சில சாக்கடைப் புழுக்கள் படமெடுத்து ஆடுகின்றன.

    ReplyDelete
  2. இவனுகளுக்கு முஸ்லிம்களின் வாய்க்குள்ள கம்ப ஓட்டாட்டி இலக்சன் செய்யமாட்டானுகள்.

    ReplyDelete
  3. இனவாத மூதேவி

    ReplyDelete

Powered by Blogger.