தமிழர்களும் - சிங்களவர்களும் மிக அந்நியோன்யமாக வாழும் சூழல் மேலும் வலுப்பெற வேண்டும்
தமிழ் மக்களும் சிங்கள மக்களும் கடந்த காலத்தில் யுத்தம் என்ற ஒரே ஒரு காரணத்தினால் பிரிந்திருந்த நிலமை இப்போது மாறியிருக்கின்றது. இரு சமூகங்களும் இணைவதற்கு இப்போது ஆயிரம் நன்மையான காரணங்களுள்ளன. அதனால் எதிர்காலத்தில் இரு சமூகங்களும் மிகவும் அந்நியோன்யமாக வாழும் சூழல் மேலும் வலுப்பெற வேண்டும. அதற்காக நாங்கள் உழைக்க வேண்டுமென்று கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் நிதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு வெள்ளவத்தை ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசைகளைத் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் கடந்த 30வருடங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகங்கள்.
ஆனால் தமிழ் சிங்கள சமூகங்கள் தங்களுக்கிடையே சந்தேகங்களை வளர்த்துப் பிளவு படவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
ஆனால் இன்று நிலைமை முற்றாக மாற்றம் பெற்றுள்ளது. தமிழ் சிங்கள மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் அந்த நிலையை நாங்கள் மேலும் வெளிப்படுத்தி நமது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து இந்த நாட்டை பொருளாதார ரீதியாகவும் ஏனைய துறைகளிலும் முன்னேற்றம் வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
முஸலீம்கள் ஒற்றுமைப்பட்டடால் இவருக்கு தரமான அமைச்சு எடுப்பதில் சிக்கல் உள்ளது.
ReplyDeleteமுஸ்லீம்கள் ஒற்றுமைப்பட்டடால் இவருக்கு தரமான அமைச்சு எடுப்பதில் சிக்கல் உள்ளது.
ReplyDeleteபெரியவர்களின் கொன்ரக்ட் ஒன்றை நிறைவேற்றும் புதிய ஜொப் இவருக்குக் கிடைத்திருக்கின்றது. நாட்டுக்கோ, இந்நாட்டு மக்களுக்கோ எத்தகைய பயனுமற்ற மங்கொள்ளைகளின் அடிவருடி.
ReplyDeleteNomber one racist person.
ReplyDelete