Header Ads



அம்பாறையில் முஸ்லிம்களின் பாராளுமன்ற, பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்ய பல சதித்திட்டங்கள்

தமிழ், முஸ்லிம் மக்கள் நிதானத்துடன் செயற்பட்டு நமது சமூகங்களுக்கான  பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பெறவேண்டுமென, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில்  முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொத்துவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தமிழ் , முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தார். தான் ஜனாதிபதியாக வந்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு தருவதாகச் சொன்னார்.  தமிழ் , முஸ்லிம் சமூகங்கள் இவரின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர்.  இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் தலைவர் மர்ஹூம். எம்.எச்.எம்.அஷ்ரப்  முன்வைத்தார் அதனை அன்று ஐக்கிய தேசியக் கட்சியினர் பாராளுமன்றத்தில்  முன்வைத்த மொழிவுகளை கிழித்து எறிந்தனர். 

நமது நாட்டில் யுத்தத்தை இல்லாமல் செய்து  அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இறைவன் சந்தர்ப்பத்தினை வழங்கினான். யுத்தத்தையில்லாமல் செய்து வரலாற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டது போல் நமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இருந்தது.

சில இனவாதிகள் அவரின் முயற்சிக்கு தடையாக இருந்து செயற்பட்டனர். இதனால்  மன்னர்கள் போன்று நமது நாட்டின் தலைவராக தொடர்ந்து பதவி வகிக்க வேண்டிய மஹிந்தவுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இனவாதிகள் இல்லாமல் செய்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்வதற்கு பல சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

நீண்ட காலமாக பொத்துவில் பிரதேச மக்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளது. எனவே இந்த பொதுத் தேர்தலில் பொத்துவில் சமூகம் பெரும்பான்மையான வாக்குகளை வேட்பாளர் வாசித்துக்கு அளித்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் ஒத்துழைப்புடன் பொத்துவில் மண்ணிற்கான அரசியல் அதிகாரத்தினைப் பெறவேண்டும் எனத் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.