வடக்கு மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதியை தெரிவுசெய்ய முடியுமென தெற்கு மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் - பிரதமர்
(இராஜதுரை ஹஷான்)
வடக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதியை தெரிவுசெய்ய முடியும் என்பதை தெற்கு மக்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். எனது ஆட்சியிலேயே வடக்கு மற்றும் கிழக்கில் அபிவிருத்தி பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டது என்பதை தமிழ் ஊடகவியலாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டுமாயின் பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற வேண்டும். என்பது கட்டாயமாகும். என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்தேகம பிரதேசத்தில் இன்று -02- இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடுதழுவிய ரீதியில் பொதுஜன பெரமுன வெற்றிப்பெறுவதுடன் காலி மாவட்டத்திலும் வழமையினை காட்டியிலும் அதிக ஆசனங்களை கைப்பற்றும். இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது அவசியமாகும். அரசியலமைப்பினை திருத்தம் செய்யவும், தற்போயை சவால்களை வெற்றிக் கொள்ளவும் பெரும்பான்மை பலத்தை பெறுவது கட்டாயமானதாகும்.
ஜனாதிபதியின் சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தை செயற்படுத்த வேண்டுமாயின் அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினர் அரசாங்கத்தை அமைக்க வேண்டும். கடந்த அரசாங்கத்தினை போன்று முரண்பாடான அரசாங்கம் தோற்றம் பெற்றால் அனைத்து இலக்குகளும் பலவீனப்படுத்தப்படும். இவ்வாறான நிலை இனியும் தோற்றம் பெற கூடாது.
நாட்டுக்கும், ஊருக்கும் சேவையர்றுபவர்களை மக்கள் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்ய வேண்டும். கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள் ஆகியோர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்தவப்படுத்தி இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தமக்கானவரை தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கு உண்டு அந்த உரிமையை முறையாக பயன்படுத்துவது அவசியமானதாகும்.
வடக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியும் என்பதை இல்லாதொழிக்க உங்களின் வாக்குகளினால் முடிந்தது. எனது ஆட்சியில் வடக்கில் துரிதமான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன. என்பதை தமிழ் ஊடகவியலாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எமது ஆட்சியில் மாகாண அடிப்படையில் அபிவிருத்தி பணிகள் வேறுப்படுத்தப்படுதப்படாது. மந்தகதியில் உள்ள அபிவிருத்தி நிர்மாண பணிகள் புதிய அரசாங்கத்தில் துரிதமான நிறைவு செய்யப்படும். என்றார்.
புதியதொரு கண்டுபிடிப்பு. வடக்கின் வாக்குகள் எதுவும் இன்றி இலங்கையில் அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியுமாம்.
ReplyDeleteWhy can't you say this in north instead of south. If you got 2% less in the Presidential Election then need to go for second count.
ReplyDelete