நான் பாராளுமன்றம் சென்று விடுவேனோ என பயத்தில் இருக்கின்றனர்
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் இன்று சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2020 பொது தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் சல தினங்கள் உள்ள நிலையில் 30 வருட யுத்ததின் பிற்பாடு இம் மக்கள் கடந்து வந்த இன்னல்கள் தொடர்பாக பாராளுமன்ற சிங்கள ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளக் கூடிய சிங்கள மொழியில் கூறி மக்களுக்கு சரியான தீர்வை வழங்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருப்பேன்.
தொல்பொருள் செயலணி தொடர்பாக மனவேதனையடைகின்றேன். இந்த நாட்டில் ஆட்சி செய்கின்றவர்களும் செய்ய இருப்பவர்களும் நான் பாராளுமன்றம் செல்வதில் பயத்தில் இருக்கின்றனா. காரணம் இந்த மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை அவர்கள் மொழியில் நான் எடுத்துக் கூறும்போது பாராளுமன்றம் சென்றவர்கள் இதுவரையும் செய்யாதையிட்டு அவர்கள் வெக்கப்படுவார்கள், அரசியலில் மட்டுமல்ல நிர்வாகத்துறையில் இருப்பவர்களும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த 4 வருடங்கள் இருந்து இந்த மக்களுக்கு என்ன செய்தார் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
அவர் ஊயிர்த ஞாயிறு குண்டுவெடிப்பில் தற்கொலை குண்டுதாரியின் தலையை இந்து மயானத்தில் புதைத்தவர். அரசாங்க அதிபர் என்ற முறையில் தனது பிரதேசத்தில் செய்துவிட்டு தேர்தலில் நின்று இம் மக்களிடம் வாக்கு கேட்பது வெக்கமில்லை என எனக்கு தெரியவில்லை.
கனகராசா சரவணன்
Post a Comment