ரணில், ரவி, மங்கள, சம்பிக்க, ராஜித, அநுரகுமாரவின் துஸ்பிரயோகங்களை அம்பலப்படுத்த உள்ளேன்
நல்லாட்சி அரசில் நீதியமைச்சராக இருந்து பின்னர் வெளியேறிய விஜேதாச ராஜபக்ச இந்த தகவல்களை வெளியிடவுள்ளார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
நல்லாட்சியின் காலத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவில் இருந்த ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இவ்வாறு சட்டத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
இவர்கள் ஆட்சிக்காலத்தில் செய்த அரசியல் அழுத்தங்கள், சட்டவிரோத தீர்மானங்கள் குறித்து அடுத்தவாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்பாக பல தகவல்களை அம்பலப்படுத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment