Header Ads



இலங்கையின் சிங்கள - முஸ்லிம் உறவை மீண்டும் உயிர்த்தெழ வைத்திருக்கும், குறாஸான் முகம்மது இஸ்மாயில் புவனேகபாகு வலியுள்ளாஹ்

குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற புவனேகபாகு மன்னனின் "ராஜ்யசபா"மண்டபத் தகர்ப்பு பரவலாக பேசப்படும் நிலையில் அதன் முஸ்லிம் தொடர்புகள் பற்றியும் இலங்கையின் மன்னராட்சி வரலாற்றில் பல்வேறு சிங்கள முஸ்லிம் தொடர்புகள் இருந்திருக்கின்றன அந்த வகையில் இன்றைய நாட்டில் முக்கிய தொல்லியல் பேசு பொருளாக மாறி இருக்கும் குறித்த இடமும் அதன் வரலாற்று பாத்திரமும் சிங்கள முஸ்லிம் உறவின் ஆணிவேராக காணப்படுகின்ற அதேவேளை இலங்கை முஸ்லிம் தொல்லியல் வரலாற்றின் முக்கிய அம்சமாகும்.

#வரலாற்று_பின்னணி
இலங்கையின் இன்றைய வட மேல் மாகாணத்தில் பல மன்னர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள் அந்த வகையில் வடமேல் மாகாணம் நான்கு இராச்சியங்களை கொண்டிருந்திருக்கின்றது.

பண்டுவஸ்நுவர' தம்பதெனிய, யாப்பகுவ, குருநாகல என்பனவே அவை. இவற்றில் குருநாகலை இராட்சியம் கிபி 13ம் 14ஆம் நூற்றாண்டுக்கு உரியதாகக் காணப்படுகின்றது இதனை #ஹஸ்த்திஸைலபுர ( Hasthisaila pura,) எனவும் அழைப்பர் , குறித்த இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களில் இரண்டாம் புவனேகபாகு முக்கியமான ஒருவராகக் காணப்படுகிறார்

#இரண்டாம்_புவனேகபாகு

யாப்பகுவ, தம்பதெனியே போன்றவற்றை ஆட்சி செய்த முதலாம் புவனேகபாகு மன்னின் மகனே இவராகும்.குருணாகல பிரதேசத்தை ஆட்சி செய்கின்றபோது இவருக்கு பல மனைவிகள் இருந்தும் புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை அக்காலத்தில் ராச்சியத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த உள்நாட்டு மற்றும் தென்னிந்திய படையெடுப்புகள் போன்றவற்றில் இருந்து நாட்டை காப்பதற்காக தனக்கு பின்னர் ஒரு இளவரசன் தேவை என உணர்ந்து அரசன் இருந்தார் ஆனாலும் அரசனுக்கு புத்திரபாக்கியம் இல்லாத காரணத்தினால் அவர் மாற்று மத பெண்ணை திருமணம் செய்தால் மாத்திரமே புத்திரபாக்கியம் கிடைக்கும் என அவரது சமய ஆலோசகர்கள் பரிந்துரை செய்தனர்.

அதனை ஏற்று இளவரசனை உருவாக்குவதற்காக புவனேகபாகு குருநாகல் "அஸ்வத்தும" என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்கின்றார் அந்த திருமணத்தின் மூலம் பிறந்த இளவரசரே குறாஸான் முஹம்மது இஸ்மாயில் புவனேகபாகு என்று அழைக்கப்படுகிறார். இவரது பிறப்பு தொடர்பாக ஒரு சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் இவரது தாய் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் இவர் அரசனின் "யக்கட தோலியாக "இருந்தவர் என்றும் பிரதான ரந்தோலி அரசிக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தினால் இவரது ஆண்மகன் பிற்காலத்தில் ஆட்சி செய்ததாகவும் கூறப்படுகின்றது.

#முக்கிய_சம்பவம்

இரண்டாம் புவனேகபாகு அக்காலத்தில் இடம்பெற்ற யுத்தங்களில் கலந்து கொள்வதற்காக தூர பிரதேசங்களுக்கு சென்றபோது மனைவியர்களை பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு சென்றார் யுத்தத்தில் வெற்றி இடம்பெற்றால் வெள்ளைக்கொடி தோல்வி அடைந்தால் கறுப்புக்கொடி காட்டுவது அக்கால வழக்கம் ஆனால் அரசன் யுத்தத்தில் வென்றும் தொடர்பாடலில் இடம்பெற்ற தவறு காரணமாக கருப்புக்கொடி காட்டப்பட்டது.

இச்செய்தி அரண்மனைக்கு அறிவிக்கப்பட்டதால் குறித்த அரசியர் அனைவரும் பெலும்கல(Balum gala) என்ற மலையின் உச்சியிலிருந்து பாய்ந்து இறந்தனர் ஆனால் குறித்த முஸ்லிம் மனைவியும் அவரது குழந்தையும் காவலர்களின் உதவியுடன் தூரப் பிரதேசத்திற்கு சென்றுவிட்டனர் பின்னர் அவர்கள் பேருவளை பிரதேசத்தில் தங்கி உறவினர்களால் பராமரிக்கப்பட்ட அதேவேளை இளவரசனுக்கு இஸ்லாம் மார்க்கக் கல்வியும் போதிக்கப்பட்டு மார்க்கத்தை சிறப்பாக பின்பற்றக்கூடிய ஒருவராகவும், குர்ஆனை மனனமிட்டவராகவும். அதே நேரத்தில் ஆளுமைமிக்க வீரராகவும் அவர் வளர்க்கப்பட்டார்.

#முஸ்லிம்_அரசாட்சி

தனது பதினைந்தாவது வயதில் தனது தந்தை 2ம் புவனேஹபாகு வின் லட்சியத்தை நிறைவேற்றி சிறந்த மன்னனாக இராச்சியத்தை ஆளவேண்டும் என்பதற்காக தனது 15 ம் வயதில் பெரும் படையுடன் வந்து அக்காலத்தில் ஆட்சி செய்த 4ம் பராக்கிரமபாகுவை தோல்வி அடையச் செய்து தனது ஆட்சியை குருணாகல் ராச்சியத்தில் நிறுவினார்

குறாஸான் முஹம்மது இஸ்மாயில் இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத அரசன் என அழைக்கப்படுகின்றார், இவர் 1325 தொடக்கம் 1328 வரே மூன்று வருடங்கள் ஆட்சி செய்த தாக கூறப்படுகிறது.. அக்காலத்தில் சிறந்த ஆட்சியாளராக அவர் ஏற்கப்பட்டார். குறாஸான் முஹம்மது இஸ்மாயில் என அழைக்கப்படும் "#3ம்_புவனேகபாகு"வின் ஆட்சி சிறந்த ஆட்சியாக கருதப்பட்டது இது பற்றி "#மகாவம்சம்"பின்வருமாறு குறிப்பிடுகின்றது.. குறித்த மன்னன்"

மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் 1000 பௌத்த பிக்குகளுக்கு தான தர்மம் செய்யக் கூடியவனாக காணப்பட்டான்" என்று மகாவம்சம் குறிப்பிடுகின்றது அதேவேளை "குருநாகல விஸ்தர" என்ற நூலும் இவர் பற்றிய நல்ல விடயங்களை குறிப்பிடுகின்றது அதேபோல் " குருநாகல் வாவி" இவரது காலத்திலேயே தோண்டப்பட்டதாகவும் ஆதாரங்கள் உள்ளன

இன்னும் "இலங்கையின் சுருக்க வரலாறு (A Short History of Ceylon (1947)என்ற நூலில் வரலாற்று ஆய்வாளர் 'HW Coddington 'இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றார்.

#கொலை_முயற்சி

2ம் புவனேகபாகு மன்னனின் இறப்புக்குப் பின்னர் ராஜ்ஜியத்தை ஒரு முஸ்லிம் மன்னன் ஆட்சி செய்வதை ஏற்றுக்கொள்ளாத ஒரு சில பிக்குகளும்,எதிரிகளும், மன்னனை பிரித் பாராயண' நிகழ்வு ஒன்றுக்கு அதிதியாக அழைத்து அவரை குறித்த மலை மண்டபத்தில் இருந்து மலையின் கீழே தள்ளி விடுகின்றனர் அதன் அதன் மூலம் அவர் அவ்விடத்தில் இறந்து போகின்றார், அப்போது அவரது வயது 18.

குறித்த இறப்பு இடம் பெற்ற பின்னர் அந்தப் பிரதேசத்தில் பல்வேறு அழிவுகளும் அவரது கொலையின் சூத்திரதாரிகள் மாயமான முறையில் கொல்லப்பட்ட அதேவேளை இரவு நேரங்களில் குதிரையில் வாள் சத்தம் ஒலிப்பதாக அக்காலத்து மக்கள் மிகவும் பயந்தனர் ,

இஸ்லாமிய முறைப்படி அடக்கப்பட்ட இவரை சிங்கள மக்கள் "கலேபண்டார தெய்யோ" என அழைக்கிறார்கள் அதேவேளை முஸ்லிம் மக்கள் இன்றும் குறாஸான் முஹம்மது இஸ்மாயில் வலியுல்லாஹ் என அழைக்கின்றனர் குருநாகல் நகர மத்தியில் இவ் அடக்கஸ்தலம் இன்றும் காணப்படுகின்றது. 

, ஒரு சில பிக்குகள் கலேபண்டார தெய்யோவுக்கு செய்த துரோகத்திற்காக சிங்கள மக்கள் அவ்விடத்திற்கு சென்று மன்னிப்பு வேண்டினர் அது இன்றும் தொடர்கிறது.

#திருமதி_புவனேகபாகு /#அம்மா_சியாறம்

3ம் புவனேகபாகுவின் தாயாரின் அடக்கஸ்தலம் குருநாகல் கண்டி பிரதான வீதியில் உள்ள" #தெலியாக்_கொன்ன" என்ற இடத்தில் உள்ளது, இதனை ஒற்றை மீஸான் சியாறம் என்பர். இவர் அஸ்வத்துகம யைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவரது மூதாதையர்கள் குறாஸான் ன் என்ற ஈரான் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பேராசிரியர் அனஸ் தனது "புத்தளம் முஸ்லிம்கள்" என்ற நூலில் குறிப்பிடுகிறார் .இன்னும் இவர் பற்றிய பல்வேறு விபரங்கள் "தென்கிழக்கு இலங்கை முஸ்லிம்களின் மான்மியத்துக்கு நம் முன்னோர் அளித்த்துசெல்வம் "என்ற நூலில் அதன் ஆசிரியர் காசிம்ஜி குறிப்பிடுகின்றார் .

இன்னும் இவரது பெயர் ஆலியா, மற்றும் அசெலத்துமா எனவும் குறிப்பிடப்படுகின்றது இந்த வரலாறு தொடர்பான விடயங்கள் குருநாகல் பிரதேசத்தில் ஏனைய இடங்களிலும் நாட்டார் பாடல்களிலும் கதைகளிலும் இவை மிகவும் சிறப்பாக மக்களால் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன அதேபோல் இந்தியாவிலிருந்து வந்த தக்கியுத்தீன் என்ற தளபதியின் வரலாற்றுடனும் இது தொடர்புபடுத்தி பேசப்படுகின்றது யெமன் நாட்டு வரலாற்றில் புவனேகபாகு என்ற பெயர் "அபூநெக்கபாலபாபஹ்"என்ற அர்த்தத்தில் உள்ளது,

#இன்றைய_முக்கியத்துவம்

* இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இந்த நாட்டுக்கு பல்வேறு வகையில் பங்களிப்பை செய்து இருக்கின்றார்கள் ஆனாலும் அவர்கள் இந்த நாட்டை ஆண்ட வரலாறு இதுவேயாகும்.
*அதேபோல் குருநாகல் ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த மன்னனான இரண்டாம் புவனேகபாகு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ததன் பின்னர் அவரும் முஸ்லிமாக மாறினார் என்றும் ஆட்சி பயத்தினால் அவன் குறித்த தனது சமய மாற்றத்தை வெளியிடவில்லை என்றும் நம்பப்படுகின்றது அதனால்தான் தனது மனைவி மற்றும் மகனை முஸ்லிமாகவே அவன் வாழ்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதையும் காணக்கூடிய இருக்கின்றது.

*அது மட்டுமல்ல அக்காலத்தில் அரசன் மணப்பெண் எடுக்கக்கூடிய உயர் சமூக அந்தஸ்து நிலையில் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரமாகவும் இச்சம்பவம் காணப்படுகின்ற அதேவேளை இலங்கையின் ஆட்சியில் குருநாகல் பிரதேசத்தில் முஸ்லிம்களின் தலைமையில் மன்னர் ஆட்சி நிலவியது மட்டுமல்ல அவர்கள் சிறப்பாக ஆட்சி செய்து இருக்கின்றார்கள் திட்டமிட்ட சதியின் காரணமாகவே அம்மன்னன் கொல்லப்பட்டிருக்கின்றான் என்ற வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றது.

தனது ஆட்சிக் காலத்தில் பௌத்த மதத்துக்கும் அதன் சிறப்புக்கும் சிறந்த பங்களிப்புசெய்தவன் 3ம் புவனேக பாகு என்பதை மகாவம்சமும் குறிப்பிடுகின்றது

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களும் இதுபற்றி பேசி இருந்தார், அது இன்றைய நிலையில் மிகவும் முக்கியமான செய்தியாகும்..

#நாம்_என்ன_செய்யலாம்???

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இவ்வாறான பல்வேறு வரலாறுகள் காணப்படுகின்றன ஆனாலும் எங்களது தீவிர சமய இயக்கவாத குறுகிய சிந்தனைகளால் நாம் அவற்றை இழந்திருக்கின்றோம் இன்றும் கூட உரிய பராமரிப்பு இன்றி இருக்கும் கலேபண்டார' மற்றும் திருமதி புவனேகபாகு அவர்களின் அம்மா சியாறமும் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்று பொக்கிஷமாக அதிக கவனத்தில் கொள்ள பட வேண்டும்.

இலங்கையில் பிறந்த ஒவ்வொருவரும் குறிப்பாக நாங்கள் அந்த இடங்களுக்கு விஜயம் செய்வதும். அவற்றை முறையாக பராமரிப்பதும் அவற்றை மீண்டும் புனரமைத்து அவற்றின் வரலாற்று ஞாபகங்களை இளம் சந்ததியினருக்கு எத்தி வைப்பதும்சமய, சமுகத் தலைவர்களினதும். ஆர்வமுள்ள அனைத்து முஸ்லிம்களினதும் கட்டாய கடமையாகும்...

#எம்_வரலாற்றை_உயிரப்பிப்பதன்_ஊடாக #மட்டுமே .. #இத்தேசத்தில்_என்றும்_தலை #நிமிர்ந்து_வாழ_முடியும்..

முபிஸால் அபூபக்கர் - சிரேஷ்ட விரிவுரையாளர்
பேராதனைப் பல்கலைக்கழகம்
21;07;2020

11 comments:

  1. ஆய்வுகள் தொடரவேண்டும்...

    ReplyDelete
  2. To the respected writer of this Article!

    I kindly request you to read the following..

    Praise be to Allah.

    Islam forbids erecting structures over graves, and commands that any such structures should be knocked down.

    EVIDANCE -1:
    It was narrated that Jaabir said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) forbade plastering over graves, sitting on them and erecting structures over them. (Narrated by Muslim, 970.)

    EVIDANCE -2:
    The hadeeth of ‘Ali referred to will be quoted below.
    It was narrated that Abu’l-Hayaaj al-Asadi said: ‘Ali ibn Abi Taalib said to me: “Shall I not send you on the same mission as the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) sent me? Do not leave any statue without erasing it, and do not leave any raised grave without leveling it.” (Narrated by Muslim, 969).

    Source: Islam Q&A online.

    And Allaah knows best.

    NOTE: If we think preserving the historical GRAVES and places of SHIRK from the history will help our existence in this country, I am afraid we the anger of Allah will fall on us.

    If the historical places will help the existence, Tamils in our country have very long history and historical evidences, but they also face problem. So remember that It is Allah who protect us but not these historical places that will lead to shirk eventually.

    Allah is keep testing us to differentiate the people, who pass and who fail in this worldly test.

    May Allah guide us in the path of true message of Islam as given to us by Allah and his messenger.

    Your brother.

    ReplyDelete
  3. Plse send this articles to my mail adrss
    A lot has been gems I gmail.com

    ReplyDelete
  4. good information for current situation

    ReplyDelete
  5. very valuable notes on this challenging time, because the challenges faced by our own community against our own history. we should bring our history among others rather than becoming extremists.

    ReplyDelete
  6. There is no future for for the people whom did not study their past history and plan the present accordingly

    ReplyDelete
  7. epdiyo shirk undaaka aasa padringa

    ReplyDelete
  8. I agree with the writer because our history has to be protected. unfortunately misguided wahabi sect followers destroyed our historical monuments in the world. They quote hadees that is for yahoodi and nasarani for the muslims. They give wrong interpretation to Ziyarams by comparing the hadees relevant for the graves of non muslims.

    ReplyDelete
  9. It is better to create a video type history documentary in very urgent basis otherwise all of Sri Lankan Muslims identity will be
    vandalized in near future.

    At least Jaffna Muslim take videos of those historical places and keep record in order to save our historical identity.

    Grave yards are one of the important historical identity so it has to be saved.

    Thanks,

    Moulavi Irshad (Qasimi)

    ReplyDelete
  10. for those who against this article, they should thing their father, their grand farther, great grand father , they have a history and they never went against our 1500 year old history , if your against the history then you are not in a proper way.

    ReplyDelete
  11. சிலருக்கு எதை எடுத்தாலும் அதை சிர்க் என்பதும் நரகம் என்பதும் வேலையாகிவிட்டது. சொர்க்க, நரகத்தைப்பற்றிக் கூற யாருக்கும் அதிகாரமில்லை அல்லாஹ்வைத் தவிர.

    ReplyDelete

Powered by Blogger.