Header Ads



முஸ்லிம்களுக்கெதிரான பேரினவாத நெருக்குதல்கள், எவ்வாறு தோன்றியது...?

பேராசிரியர் மௌலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் (கபூரி)

(இக்கட்டுரையில் இடம்பெறும் முக்கிய தகவல்களும் குறிப்புக்களும் இலங்கையின் பிரபல சிங்களப் பேராசிரியர் (Prof. Kumari Jayawardene)   Ethnic and class Conflict in Sri Lanka  ஆங்கில மொழி நூலிருந்தும் ஏனைய பலரின் கட்டுரைகளிலிருந்தும் பெறப்பட்டவையாகும்)

இலங்கையின் வரலாற்றில் சிறுபான்மையினருக்கு எதிரான பௌத்த - சிங்கள - மக்களின் எதிர்ப்பலைகளும், பகைமையுணர்வுகளும், இலங்கையை ஐரோப்பியர்; ஆட்சி செய்த காலப்பிரிவிலிருந்தே தோற்றம் பெற்றிருந்தமையை வரலாற்றுச் சான்றுகளினூடாக நாம் காணலாம். 1883ம் ஆண்டுகளில் பௌத்தர்களும் கத்தோலிக்கர்களும் கொழும்பின் வீதிகளில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதை பல சம்பவங்களின் மூலம் அறிய முடிகின்றது. பௌத்த சிங்கள மக்களின் சிறுபான்மையினருக்கு எதிரான உணர்வுகள், பல கட்டங்களில் கூர்மையடைவதற்கு பல்வேறு விடயங்கள் உணர்வு பூர்வமாக அப்போது காணப்பட்டன.

அவற்றுள் முக்கியமானவைகளாக பின்வருவனவற்றை நாம் அடையாளப்படுத்தலாம்.

பொருளாதாரமும் வர்த்தகமும்
உயர் கல்வி வாய்ப்புக்கள்

பௌத்த சிங்களவர்களுக்கு உலகில் இலங்கை மட்டுமே ஒரே நாடு என்ற அவர்களின் எண்ணக்கரு.
இந்த நாட்டில் அந்நியர்கள் தமது கலை, கலாச்சார, மத, தொல்பொருளியல் சின்னங்களை தொடர்ந்து சீரழித்து வருகின்றார்கள் என்ற பிரச்சாரம்.

இவ்வாறான விடயங்களை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் அடிக்கடி நினைவூட்டும் துண்டுப் பிரசுரங்களும், நூல்களும், பத்திரிகைகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. 

உதாரணமாக 1980ல் வெளிவந்த 'கவ்த கொடியா?' (புலிகள் யார்?) என்ற சிங்கள பிரசுரத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

'சிங்களவர்களின் இனம் 2500 வருடங்களுக்கு மேற்பட்ட, எவ்வித தடங்கலையும் சந்திக்காத, உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்றைக் கொண்ட இனமாகும். இலங்கையில் சிங்களவர்களின் பூர்வீக வரலாற்றை விட வேறு எவ்வித வரலாறுகளும் கிடையாது. 'சிங்களவர்களுக்கே உரித்தான இலங்கை' என்ற வரலாற்று நிரூபனம், வெறும் வாய்மொழி ரீதியான, புனைந்துரைக்கப்பட்ட வரலாற்று நிரூபனமல்ல. பூர்வீகமான கற்பாறையிலுள்ள எழுத்தோவியங்கள், விகாரைகளில் தங்கத்தினால் பொறிக்கப்பட்ட சுவரோவியங்கள், புத்தரின் அதிகளவிலான சிலைகள், மிக அதிகளவான நீர் அணைக்கட்டுக்கள், விவசாய நீர்ப்பாசன முறைகள் எல்லாமே சிங்கள இனத்துக்கும் சிங்கள தேசியத்துக்குமுரிய அசைக்க முடியாத பாரம்பரிய மிக்க சான்றுகளாகும்.' என்று அமைந்திருந்தது.
பௌத்த சிங்கள மக்கள் தாம் இப்பிராந்தியத்தில் (தெற்காசிய நாடுகளில்) ஒரு சிறுபான்மையினமெனவும், இலங்கையைத் தவிர வேறெந்த நாடும் தமது இனத்துக்கு இல்லை எனவும் மனதளவில் கவலையுற்றிருந்தமையும் மிக முக்கிய காரணமெனலாம். ஏனெனில் சமகாலத்தில் இலங்கையில் வாழும் ஏனைய சிறுபான்மையின மக்கள், இப்பிராந்தியத்தில் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளுடனும் இனரீதியிலான தொடர்புகளை கொண்டிருப்பது அவர்களின் கவலையையும், மனக்கிலேசத்தையும் அதிகரித்திருந்தது.

உதாரணமாக 1970ல் சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட 'சிங்களயாகே அதிஸி ஹதுர' (சிங்களவர்களின் மறைமுக எதிரி) என்ற பிரசுரத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

'சிங்களவர்களுக்கு இலங்கையைத் தவிர வேறெந்த தாய் நாடும் கிடையாது. இந்திய தொழிற்சங்கத் தலைவர்கள், போரா வர்க்கத்தினர், ஏனைய சிந்தி வியாபாரிகள், ஹிந்தி வியாபாரிகள், அநேக தமிழ் தொழிலாளர்கள் எல்லோருமே செல்வத்தை பெருமளவில் ஈட்டிக் கொள்வதற்கான - களஞ்சியமாக, சுரங்கமாக - இலங்கையை பாவித்து, அச்செல்வத்தை இந்தியாவில் தமது பிள்ளைகள், உறவினர்களுக்கான பிரமாண்டமான வீடுகளை கட்டிக் கொள்வதற்கும், நிலங்களை கொள்வனவு செய்வதற்கும் முதலீடு செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் இலங்கையில் ஒரு காலையும், இந்தியாவில் ஒரு காலையும் ஆழப்பதித்துள்ளார்கள். இலங்கை 'பொன்விளையும் பூமி' என்ற வகையிலேயே இந்நாட்டின் மீது அவர்களின் பற்றுதல் உள்ளது. இவர்கள் எவருமே சிங்களவர்களின் கலாச்சாரம், மொழி, பௌத்தமதம், பூர்வீகமான சிங்கள மக்கள் என்ற எந்த விடயத்திலும் அனுதாபம், ஆதரவு உடையவர்களல்ல.'  

1981ல் வெளியிடப்பட்ட 'சிங்களுனி, புது சாசுன பெர கனீவ்' ('சிங்களவர்களே!, பௌத்த மதத்தை பாதுகாப்போம்') என்ற சிங்கள மொழியிலான பிரசுரத்தில் பின்வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
'சிங்கள இனத்துக்கும் பௌத்தர்களுக்குமிடையில் மிக நெருக்கமும், பிரிக்கவும் முடியாத இணைப்பும், பின்வரும் கோஷத்தை வலியுறுத்தும் பாங்கும் காணப்படுகின்றன. 'சிங்கள மொழியின்றி பௌத்தமில்லை. பௌத்தமின்றி சிங்கள மொழியில்லை' இது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். சிங்கள இலக்கியங்களே பௌத்த இலக்கியங்களாகும், சிங்களவர்களின் வரலாறே பௌத்த வரலாறாகும், புத்தரின் கோட்பாடுகளினால் சிங்கள மொழி செழுமை பெறுகின்றது, சிங்கள நாகரீகம் என்பது பௌத்த நாகரீகமாகும், சிங்கள கலாச்சாரம் என்பது பௌத்த கலாச்சாரமாகும், சிங்களக் கொடியே சிங்கள பௌத்தர்களின் கொடியாகும்.' 

'சிங்களவர்களின் வாழ்வு பௌத்தத்தினால் நல்வழிப்படுத்தப்படுகின்றது. அண்மையில் சில சிங்கள், பௌத்த எதிர்ப்பலைகள் கொண்ட சில இயக்கங்கள் தோற்றம் பெற்றுள்ளன. இந்த மூர்கள் எமது பெறுமதிமிக்க தொல்பொருளியல் சின்னங்களையும், பௌத்த புனித இடங்களையும் நாசமாக்கி வருகின்றார்கள்.'

'எமது எதிர்கால சந்ததியினரும், அதே போல் நமது இனம், மதத்தின் கம்பீரம் என்பவற்றுக்காக தமது வாழ்வை தியாகம் செய்த எமது மூதாதையர்களும் எமது மௌன நிலைக்காக எம்மை சபிப்பார்கள், சாபமிடுவார்கள். எமது இனத்தின் பெயரால், எமது மூதாதையரின் பெயரால், இதுவரை பிறக்காத எமது சந்ததிகளின் பெயரால் இனியாவது நாம் இந்த மோசமான நிலைக்கு முகங்கொடுப்போம்.'
மேற்கண்ட ஆவணச் சான்றுகளின் அடிப்படையில், இந்த இலங்கை நாடு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமான ('பூமி புத்திர' – மண்ணின் மைந்தர்கள்) நாடு எனவும், ஏனைய எல்லாப் பிரிவினரும் அந்நிய நாட்டவர்களே எனவும், இந்த அந்நியர்கள் இந்த நாட்டையும், அதன் மக்களையும் தமது சுயநலத்துக்காக சீரழிக்கின்றார்கள் எனவும் சிங்கள பௌத்தர்களின் கோட்பாடு பூரணமாக ஏற்றுக் கொள்கின்றது.

சிங்கள பௌத்த மக்களிடத்தில் மற்றொரு தவறான கருத்தும் பரவலாக சிலரால் விதைக்கப்பட்டுள்ளது. அதுதான் 'சிங்களவர் அல்லாதவர்கள் சூட்சுமமான – அநீதியான – முறைகளில் அநேக அரசாங்க வேலை வாய்ப்புக்களையும், பல்கலைக்கழக அனுமதி போன்ற பல்வேறு வரப்பிரசாதங்களையும் தொடர்ந்து பெற்று வருகின்றனர். இதனால் வேலை வாய்ப்புக்களும், பல்கலைக்கழக அனுமதியும் இனரீதியான பங்கீட்டு – கோட்டா ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளும் கடந்த காலங்களில் முன்மொழியப்பட்டுள்ளன. மிக முக்கியமாக பின்வரும் சிங்கள ஆவணமொன்று; தமிழர்கள் சட்டரீதியற்ற முறையில் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதாக 1970ம் ஆண்டில் குற்றம் சாட்டியது.

'பேராதனைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட காலப்பகுதியில், இந்த நாட்டில் வாழும் சாதாரண மக்கள்; மருத்துவ, பொறியியல், ஏனைய விஞ்ஞானத் துறைகளில் கல்விகற்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அக்காலத்தில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களாக யார் இருந்தார்கள்? தமிழர்களே இருந்தார்கள்.'

'கல்வி வாய்ப்புக்கள் அனைத்தும் சிங்கள மக்களுக்குரிய இயற்கையான உரிமையாகும்' என அன்று மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாகக் காணப்பட்ட எல்.எச். மேதானந்த, எப்.ஆர். ஜயசூரிய, கே.எம்.பி. ராஜரட்ன போன்றவர்களே கோஷம் எழுப்பினார்கள். உண்மையில் இவர்கள் அனைவரும் இனவாதிகளாகும்.

கடந்தகால நிகழ்வுகள், வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான பிரசுரங்கள், சிங்கள பௌத்த மனோபாவங்களினூடாக, சிறுபான்மை மக்களுக்கு எதிரான மனோபாவம் கடந்த பல நூற்றாண்டுகளாக இலங்கையில் காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உண்மை எனவும் வரலாறுகள் நிரூபிக்கின்றன. இவ்வாறான மனோபாவம் இன்றுவரை அதைவிடக் குறைவாகவோ, அல்லது அதிகமாகவோ காணப்படுவதையும், அதன் காரணமாக சிறுபான்மைச் சமூகம் கடந்த பல ஆண்டுகளாக பெரும்பான்மையின மக்களின் பல்வேறு தாக்குதலுக்கு முகங்கொடுத்து வருவதையும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.

இதன் காரணமாகவே, இலங்கையில் வாழும் பல்வேறு இனக்குழுமங்களிடையே இன, மதப்பகைமையுணர்வு மேலும் விரிவடைந்து வருவதையும் நாம் அவதானிக்கலாம்.

'முஸ்லிம்களுக்கெதிராக சிங்கள வர்த்தகர்கள்'

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள மக்களின் மனப்பாங்கு தளிர்விட முக்கிய காரணம் வர்த்தகத்தில் ஏற்பட்ட போட்டி மனப்பான்மையாகும். 19ம் நூற்றாண்டின் இறுதி கால் நூற்றாண்டில், காலனித்துவ நாடுகளின் பொருளாதராம் இலங்கையை முழுமையாக ஆக்கிரமித்து, வடக்கையும், தென்னிந்திய வர்த்தகத் தலைநகரையும் பிரித்தானியர் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். சிங்கள மத்தியதர வர்க்கத்தினர், இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்களும் ஒன்றுகூடி இதற்கெதிராக கிளர்ந்தெழுந்தார்கள் 
முஸ்லிம் மத்திய தர வகுப்பினரின் பொருளாதார அடிப்படை வர்த்தகமாகவும், தமிழ் மத்தியதர வகுப்பினரின் பொருளாதார வருமானம் பெருந்தோட்டப்பயிர்ச் செய்கை, ஏனைய சேவைகள்  - முக்கியமாக வர்த்தக முதலீடுகளின் மூலமும் பெறப்பட்ட அதே வேளை, சிங்கள மத்திய தர வர்க்கத்தினர்;, மதுபான விற்பனை, கரி சுரங்கத்தொழில் மூலமும் பெற்றுக் கொண்டனர். எவ்வாறெனினும் சிங்கள சமூகமும், தமிழ் சமூகமும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திலோ பெரிய முதலீடுகளுடனான சில்லறை வர்த்தகத்திலோ பிரித்தானியருடனோ, போரா, இந்தியர்கள், பாரசீகர்கள், செட்டிகள், முஸ்லிம்களோடு போட்டி போட முடியவில்லை. இதன் காரணமாகவே, இந்த இரண்டு இனத்தவர்களும் (சிங்கள, தமிழ்) பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனமுற்று காணப்பட்டமையினால், அதற்கு மாற்றீடாக உயர் தொழில் துறைகளிலும் அரசாங்க வேலை வாய்ப்புகளிலும் கூடிய கவனம் செலுத்த தலைப்பட்டனர். எவ்வாறெனினும் சிறிய சிங்கள வர்த்தகர்கள் மற்றைய இன வர்த்தகர்களுக்கு எதிராக தமது விரோதத்தை காண்பித்து, கூச்சலிடும் ஒடு அழுத்தக் குழுவாக மாற வாய்ப்பேற்பட்டது. 

இலங்கையில் சிங்கள, தமிழ் முதலீட்டாளர்களின் பலவீனம் பின்வரும் தகவல்களிலிருந்து உறுதியாகின்றது. 1863ம் ஆண்டில் இலங்கையில் 33 முன்னோடி வர்த்தகர்களும், ஏற்றுமதி இறக்குமதியாளர்களும் காணப்பட்டார்கள். இவர்களில் 27 பேர் ஐரோப்பியரும், நால்வர் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்தவர்களுமாக இருக்க, ஒருவர் யாழ்ப்பானத்தைச் சேர்ந்த P.டீ.பெர்ணாண்டோ, நு.நண்ணி தம்பி என்ற இலங்கையராகவும் இருந்தார்கள். 

(ஆதாரம் :- குநசபரளழn'ள னுசைநஉவழசல)

1880 ல் இலங்கையில் காணப்பட்ட 54 முன்னோடி வர்;த்தக முதலீட்டாளர்களில் 50 பேர் ஐரோப்பியராகவும், இருவர் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்தவர்களாகவும், இருவர் இலங்கையை சேர்ந்த சிங்களவர்களாகவும் (சார்ள்ஸ் சொய்ஸா, ஜெரோனிஸ் பீரிஸ் ஆகியோர்) காணப்பட்டார்கள். உள்ளுர் வர்த்தக நகரமான புறக்கோட்டை (PPPநவவயா) 1803ம் ஆண்டில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 75 நட்டுக்கோட்டை செட்டியார்களினதும் (அரிசி, துணிமணி, வியாபாரம்) 35 முஸ்லிம் வர்த்தகர்களினதும் (பல்வகை வியாபாரப் பொருட்களுடன் தொடர்பு) ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தது. இககாலத்தில் எந்த சிங்கள, தமிழ் சமூகத்துடைய வியாபார நிறுவனங்களும் இங்கே காணப்படவில்லை. 1880ம் ஆண்டில் புறக்கோட்டை (Pநவவயா) 86 செட்டி வர்த்தகர்களினதும், 64 முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களினதும் பூரண கட்டுப்பாட்டில் இருந்தது. அதே வேளை ர்.டொன் கரோலிஸ் (மரத் தளர்பாடம்) N.ளு.பெர்ணாண்டோ (காகிதாதிகள்) ஆகிய இரண்டு சிங்கள வியாபார நிறுவனங்கள் மட்டுமே காணப்பட்டன. 1890ம் ஆண்டில் இந்தியாவின் குஜராத்திலிருந்து புதிய முஸ்லிம் வர்த்தகர்கள், இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபட்டு, பிரித்தானியரின் புதிய வர்த்தக பங்களாளிகளாக மாறினார்கள்.

தொடரும்...

4 comments:

  1. இலங்கையில் சிறுபான்மையினர் உரிமை கோரி போராட்டம் செய்வதை தவிர்த்து குறிப்பாக முஸ்லிம்கள் உலக வர்த்தகத்தை இலங்கையுடன் இணைக்கும் சக்தியாக இலங்கையின் பொருளாதாரத்தினை நிர்ணயிக்கும் சக்தியாக வளர முடியுமாக இருந்தால் அதேபோல் தமிழ் சமூகம் தொழில் நுட்பத்தில் பெரும் சக்தியாக வளர முடியுமாக இருந்தால் இலங்கைச் சமூகங்கள் ஒன்றில் ஒன்று பின்னிப்பிணைந்து வாழ வேண்டிய சூழல் தோன்றினால் பிரிந்து வாழ முடியாமல் போகும்.

    ReplyDelete
  2. Mr. Jalaldeen is a retired lecturer in the field of Arabic language who has worked at the South Eastern University of Sri Lanka. He is not a professor and was just a senior lecturer. I am surprised that he mentioned as Professor. He can not use the term of professor. I believe that he is trying to get some benefits from universal diplomatic by lightning as a professor. Therefore, the public of Sri Lanka is asked to be aware of such a person.

    ReplyDelete
  3. As far as I know. Movlavy M.S.M. Jalaldeen is a retired Associate Professor in Arabic Language, Department of Arabic Language, South Eastern University of Sri Lanka. He was promoted as an Associate Professor by the South Eastern University of Sri Lanka with effect from 2017. He performed his duties as an associate professor until his retirement in 2019.

    ReplyDelete
  4. ஐயா Aslam Mohammed Sir: ஜலால்தீன் என்பவர் Professor ஆ அல்லது ஒரு விரிவுரையாளரா என்பது அல்ல தற்போதைய பிரச்சினை. எங்கட முஸ்லிம்களுக்கு எட்டுப் பக்கத்தாலும் அடியும் உதையும் விழுவதற்கு உங்களைப்போன்ற விதணடாவாத சக்கரவர்த்திகள்தான் பெரும் காரணமாக இருக்கின்றார்கள். எமுதியவர் அவரகளுக்கு ஏதோ அவரது அன்பின் நிமித்தமோ என்னவோ Professor என்று எழுதிவிட்டார். அது ஒரு பெரிய ஏன் சிறிய பிழைகூட இல்லை. அவர்கள் சொன்ன விட்யம் சரியா அல்லது பிழையா. அதுபற்றிய உங்கள் அபிபபிராயம் என்ன. அதுதான் இங்கு மிக முக்கியம். ஒரு பல்கலையில் விரிவுரையாளராக இருப்பது என்பதே மிக மிகப் பெரிய விடயம். அவர்கள் ஒரு கல்விமான். அவ்வளவுதான். Come on Aslam Mohammed, நல்ல முறையில் சிந்தியுங்கள். பொருத்தமானதை எழுதுங்கள். எங்களைப்போன்ற கற்றுக்குட்டிகளும் அதனால் பிரயோசனமடையலாம்தானே!.

    ReplyDelete

Powered by Blogger.