யோசித்து யோசித்து மனதளவில் பாதிக்கப்பட்டேன் - அதனாலே தப்பித்து சென்றேன்
யோசித்து யோசித்து மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தேன் அதனாலேயே மருத்துவனையிலிருந்து தப்பித்து சென்றதாக கொழும்பு IDH மருத்துவமனையிலிருந்து தப்பித்த கொரோனா நோயாளி தெரிவித்துள்ளார்.
கொழும்பு IDH மருத்துவமனையிலிருந்து தப்பி சென்ற கொரோனா நோயாளி 8 மணித்தியாலங்களின் பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றமைக்கான காரணம் என்ன என செய்தியாளர்களிடம் கருத்துப் பகிர்ந்து கொண்ட அவர்,
யோசித்து யோசித்து மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தேன். அங்கு யாரும் இருக்கவில்லை. தான் தப்பி வந்து விட்டேன்.
அதிகாலை 4.30 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி விட்டேன். 9 மணியளவில் புறக்கோட்டைக்கு வந்து விட்டேன்.
IDH இல் இருந்து வெல்லம்பிட்டிய ஊடாக, புறக்கோட்டைக்கு நடந்தே வந்தேன். எந்தவொரு கடைகளிலும் உணவு உட்கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
Post a Comment