Header Ads



தொலைபேசியுடன் மைத்திரிக்கு தொடர்பு - தமது ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்கவும் விருப்பம் - ரவி

பொதுஜனபெரமுனவின் வேட்பாளராக போட்டியிடுகின்ற மைத்திரிபால சிறிசேன ஐக்கியமக்கள் சக்தியுடன் தொடர்பை பேணுவதுடன் தனது ஆதரவுடன் அரசாங்கத்தை பேணலாம் என தெரிவித்துவருகின்றார் எனவும் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி பிளவுவடைவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிசேன முதலில் 2018 ஒக்டோபரில் 52 நாள் அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சி செய்ததன் மூலம் ஐக்கியதேசிய கட்சியை பிளவுபடுத்த முயன்றார் என ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர்களை அந்த அரசாங்கத்தில் இணைக்கமுயன்றார்,அப்போதைய பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை அகற்றிவிட்டு ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு முன்வந்தார் என ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரிப்பதற்காக சிறிசேன இதனை செய்தார் எனவும் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியிலிருந்து வேறு எவராவது பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தால் அது கட்சியை பிளவுபடுத்தியிருக்கும் என குறிப்பிட்டுள்ள ரவிகருணாநாயக்க நாங்கள் இந்த முயற்சியை அந்த தருணத்தில் முறியடித்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சியின் முதல் இரண்டு வருடங்கள் வரை சிறிசேன எங்களுடன் சிறந்த உறவை கொண்டிருந்தார் ஆனால் நாங்கள் மீண்டும் அவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்போவதில்லை என்பதை உணர்ந்த பின்னர் அவர் எங்கள் முதுகில் குத்த ஆரம்பித்தார் எனவும் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளராக போட்டியிடுகின்ற சிறிசேன ஐக்கியமக்கள் சக்தியுடன் தொடர்பை பேணுவதுடன் தனது ஆதரவுடன் அரசாங்கத்தை பேணலாம் என தெரிவித்துவருகின்றார் எனவும் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இவன் ஒரு நயவஞ்சகன் எந்த கட்சியிலும் சேர்க்க கூடாது

    ReplyDelete
  2. இரண்டும் கழன்ற அகப்பைகள்.எதற்கும் உகந்ததல்ல.

    ReplyDelete

Powered by Blogger.