தயாசிறிக்கு கோபம் வந்துள்ளது, புத்திசாலி என்ற போதிலும் தவளை போல அங்குமிங்கும் தாவும் முட்டாள்
மைத்திரிபால சிறிசேன பஞ்ச மகா சக்திகளை யானையின் வாலில் தொங்கவிடும் போது உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அரசியலில் ஈடுபட இடம் இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசியல் அனாதைகளாக மாறினர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் மைத்திரியுடன் சார்ந்த எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் எனக் கூறும் போது தயாசிறி ஜயசேகரவுக்கு கோபம் வந்துள்ளது. அவர்கள் படித்த புத்திசாலிகள் என்ற போதிலும் தவளைகளை போல் அங்குமிங்கும் தாவி முட்டாள்களை போல் பேசிக்கொண்டிருக்கின்றனர் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவை சார்ந்த எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் சுசில் பிரேமஜயந்த, தற்போது நிலவும் கொரோனா நிலைமை காரணமாக அவர் அப்படியான கருத்தை கூறியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
' தற்போதைய நிலைமையில் உரசிக்கொண்டு இருப்பது சரியல்ல. ஒரு மீற்றர் இடைவெளி இருக்க வேண்டும். இந்த அர்த்தத்தில் அவர் இதனை கூறியிருக்கலாம். இந்த கருத்து அனில் ஜாசிங்கவின் கருத்துக்கு அப்பால் சென்ற கருத்தாக இருக்கலாம்” என சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
அதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி ஒரு பக்கமும், பிரதமர் மறுபக்கம் இருந்து கொண்டு நடந்த கயிறு இழுப்பால், நாடு செயலிழந்து போனதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இப்படியான நிலைமை ஏற்பட இடமளிக்காது நாட்டை முன்னெடுத்துச் செல்ல தமது அணியினருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment