Header Ads



மைத்திரிபால தூற்றப்படுவதாக கவலை


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தூற்றும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் நடந்து கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இந்த வாரத்தில் கடிதம் ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அனுப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பந்துல வெல்லல இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சேறு பூசும் வகையில் கொழும்பு, கம்பஹா, பொலநறுவை போன்ற பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கருத்துக்களை கூறியுள்ளனர்.

இது இரண்டு கட்சிகளுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் உடன்பாட்டுக்கு எதிரான செயலாகும் என்று பந்துல சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் இந்த செயற்பாடு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நாட்டின் அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கும் முனைப்பாகவே கருதப்படுகிறது என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சட்டத்தரணிகள் சங்க தலைவர் பந்துல வெல்லல சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.