Header Ads



கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை இறுக்கமாக பின்பற்றுங்கள் - பள்ளிவாசல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்

முஸ்லிம் சமூகத்தின் உயர்வும் முஸ்லிம் கிராமத்தின் எழுச்சியும் அப்பகுதி பள்ளிவாசல்களிலேயே தங்கியுள்ளது.

ஜும்ஆ மற்றும் ஐங்கால கூட்டு தொழுகைகளுக்கு மட்டுமின்றி முஸ்லிம்களின் அனைத்து நடைமுறைகளிலும் பள்ளிவாசல்களின் பங்கும் வகிபாகமும் இன்றியமையாத ஒன்றாகும்.

ஆகவே கொரோனா பரவலின் முதலாவது அலையின் போது நமது சமூகம் பள்ளிவாசல்களை மூடி நாட்டு சட்டத்துக்கு தலை வணங்கியது. அது போலவே தற்போது கொரோனா பரவலின் அறிகுறிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணுகிறோம்.

இந்த வேளையில் இலங்கையின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வக்பு சபை மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எவ்வகையிலான வழிகாட்டல்களை பின்பற்றுமாறு ஏவியுள்ளார்களோ அதனை முறையாக இறுக்கமாக கடைபிடித்து நடைமுறைப்படுத்துவதில்தான் எமது பள்ளிவாசல்களை மூடுவதிலிருந்து  பாதுகாக்கவும் அழகான முறையில் அமல்களைக் கொண்டு செழிப்பாக்குவதற்கும் உதவியாக அமையும்.

அந்த வகையில் மீண்டுமொரு முறை சுகாதார வழிமுறைகளை ஞாபகமூட்டுகிறோம்.

1. வீட்டிலிருந்து வுழூ செய்து வருதல்

2. பொது முஸல்லாக்களை பாவிக்காமல் வீட்டிலிருந்து முஸல்லா விரிப்புகளை எடுத்து வருதல்

3. முகக் கவசம் அணிந்து வருதல்

4. இரண்டு கைகளையும் சவர்காரமிட்டு கழுவிக் கொண்டு பள்ளிவாயலுக்குள் நுளைதல்

5. நோயாளிகள், சிறுவர்கள்  பள்ளிவாயலுக்கு வருவதை தவிர்த்தல்

6. சமூக இடைவெளியை கவனத்தில் கொண்டு பள்ளிவாயலுக்குள் கூடி கதைத்துக் கொண்டிருப்பதை தவிர்த்தல்

7. 1 மீற்றர் இடைவெளி பேணி முஸல்லா விரிப்புகளில் தொழுகையை நிறைவேற்றுதல்

8. கைகலாகு மற்றும் கட்டியணைத்து முஸாபஹா முஆனகா  செய்வதை தவிர்த்தல்

9. பள்ளிவாசலிலிருந்து வெளியேறும் போது சமூக இடைவெளி பேணுதல்

10. வெப்பநிலை கருவி, தொற்றுநீக்கல் திரவங்கள், பதிவேடு போன்றவைகளை முறையாக பின்பற்றல்

எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் ஒவ்வொருவரும் தமது பள்ளிவாசல்  நிர்வாக சபைகளுக்கும்  ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

கொரோனா உயிர்கொல்லி நோய் பரவலிலிருந்து எம்மையும் எமது சமூகத்தையும் எமது நாட்டையும் பாதுகாப்போம்.

No comments

Powered by Blogger.