நாம் இனவாதத்தை முன் எடுக்கும் போது, மறுபுறத்தில் எம்மீதும் இனவாதம் பிரயோகிக்கப்படுகிறது
இன ரீதியான கட்சிகளின் உருவாக்கத்தால் எமக்கு எதிராக இனவாதம் பிரயோகிக்கப்படுகிறது. முஸ்லிம் பெயர்களில் கட்சிகள் உருவாக்கப்படுகையில் எதிரான கட்சிகள் முளைக்கின்றன.
இதுகுறித்து நாம் சிந்தித்து முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என பொதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரிஸ் ஹாஜியாருக்கு ஆதரவளித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், பயங்கரவாதத்தை நிறைவு செய்த தரப்பிற்கு நன்றி செலுத்த வேண்டிய தருணத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிராக வாக்களித்தது பாரிய வரலாற்றுத் தவறாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சஜித் பிரேமதாச பெற்றவாக்குகள் 55 இலட்சமாகும்.
அதில் அரைவாசிக்கு மேற்பட்டவை சிறுபான்மை இனங்களான முஸ்லிம்களும் தமிழர்களும் வழங்கியதாகும். அதேநேரம் கடந்த காலத்தில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தால் பாரியளவில் நட்டங்களை சந்தித்தவர்கள் தமிழர்களாகும்.
அதற்கு அடுத்தபடியாக முஸ்லிம்களுக்கும் பாரிய பிரச்சினைகள் இருந்தன. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை உட்பட 612 பொலிசார் வரிசையில் வைத்து சுடப்பட்ட சம்பவம் உட்பட பலவற்றைக் குறிப்பிடலாம். எனவே மேற்படி யுத்தம் முடிவடைந்த காரணத்தால் அதன் மூலம் நிம்மதி அடைந்தவர்களும் தமிழ் - முஸ்லிம் சமூகம்தான். எனவே கூடுதலான அளவு நன்றிசெலுத்த வேண்டிய இரு சமூகங்களும் எதிராக வாக்களித்தமை ஒருபாரிய வரலாற்றுத் தவறாகும்.
கடந்த மகிந்த ஆட்சியில் நடந்த ஒருசிறு சம்பவம் தான் பேருவளைச் சம்பவமாகும். 24 மணிநேரத்தில் கலவரம் நடந்த இடத்தின் அடையாளம் தெரியாமல் யாவற்றையும் அகற்றி புதிதாக கட்டிடங்களையும் முப்படையின் உதவியுடன் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதேநேரம் முஸ்லிம்கள் 90 சதவீதம் ஆதரவு தெரிவித்த நல்லாட்சி அரசில் திகனையில் ஐந்து நாட்கள் தொடர்ந்து கடைகளும் வீடுகளும் எரிய அதனைதடுக்காது பார்த்துக் கொண்டிருந்தார்கள். சஹ்ரான் பிரச்சினையில் எம்மை பாதுகாக்காதவர்கள் யார் என்பதும் உங்களுக்குத் தெரியும். இவ்வளவு காலமும் நீங்கள் வாக்களித்த ஜக்கியதேசிய கட்சிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்.
சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தில் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்த கருத்தை சற்று பாருங்கள். உலகில் வளர்ச்சியடைந்த பலநாடுகளால் மேற்கொள்ள முடியாத 'கொவிட் - 19' ஐ இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை பாராட்டத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.
ஒருநாட்டிற்குத் தேவை பாதுகாப்பு , பொருளாதார அபிவிருத்தி இந்த இரண்டுமாகும். யுத்தத்தில் இருந்து நாட்டை பாதுகாத்த அரசு,கொவிட் -19 பரவுதலில் இருந்து எமது உயிர்களைப் பாதுகாத்த அரசு ராஜபக்ச அரசாகும்.
நியுடனின் விதிப்படி ஒவ்வாரு தாக்கத்திற்கும் மறுதாக்கம் ஒண்டு. நாம் இனவாதத்தை முன் எடுக்கும் போது மறு தாக்கமாக எம் மீதும் இனவாதம் பிரயோகிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் தமிழ் கட்சிகள் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் என்று ஆரம்பித்து பல இனவாடை வீசும் கட்சிகள் உருவாகின. அதன் பின் முஸ்லிம் காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என பல காங்கிரஸ்கள் உருவெடுத்தன. எனவே அதன் மறுதாக்கமாக சில சேனாக்களும், உரிமைகளும் உருவாகின. எனவே இதிலிருந்துவிடுபடவேண்டும். அதற்கு எடுத்துக் காட்டாக நாம் நடந்துகாட்டவேண்டும் எனக் கூறினார்.
அக்குறணை குறூப் நிருபர், எம்.ஏ.அமீனுல்லா
100% உண்மை.ஆனால் முஸ்லிம் காங்கிரசினதும் ஸ்ரீ.ல.ம.காங்கிரசினதும் பின்னால் அத்தலைவர்களுக்கு இன்னும் கூஜா தூக்கும் அடிமட்ட,மடத்தனத்தின் அடையாளம்களான கிழக்கு முஸ்லிம்கள் உள்ளவரை அத்தலைவன்கள் இன்னும் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்
ReplyDeleteHe doesn't know the difference between communal politics and identity politics? why doesn't he refer the history of communal politics from formation of national congress in 1923 and the isolation Muslims? why doesn't he refer the background of boomi puthra, hela, Tamilar.... and so..?
ReplyDeleteவாக்கு என்பது தனிநபர்களின் உரிமை.அந்த உரிமை அவனுடைய பாதுகாப்புக்கும், அவன் சார்ந்த சமூகத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்து அந்த சமூகத்தின் நலன்களைப் பேணி அவர்களைப்பாதுக்கும் என உறுதியாக நம்பும் எந்தக்கட்சிக்கும் வாக்களிக்கும் உரிமை ஒவ்வொரு தனிநபர்களுடைய உரிமையாகும். இதை விட்டு ராஜபக்ஸாக்களுக்கு முஸ்லிம்கள் வாக்களித்து வக்காளத்து வாங்காமை முஸ்லிம்கள் விட்ட வரலாற்றுத் தவறாகும் எனக்கூறுவது எவ்வளவுதூரம் பொருத்தமாக இருக்கின்றது என்பது பெரிய கேள்விக்குறியாகும். அதையும் இதையும் உளத்தி மக்களின் உரிமைகளில் கைவைப்பது எவ்வளவு பெரிய மனிதஉரிமை மீறல் என்வது இந்த சட்டங்கள் பேசும் வக்காளத்து வாங்குபவர்களுக்கு விளங்குவதில்லை என்பது தான் சமூகம் எதிர்நோக்கும் மிகப் பெரிய ஆபத்தாகும்.
ReplyDeleteஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஃபாரிஸ் ஹஜியாராய் ஒருமனதாக வாக்களிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
ReplyDeleteமுஸ்லிம்கள் அரசியல் ரீதியாக தாங்களாகவே செயல்படத் தொடங்கியுள்ளனர், மேலும் கோதபயாவை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். கோட்டாபயா, மஹிந்த வின் வெற்றியை வெற்றிபெறச் செய்வதற்கான திறனுக்குள் முடிந்த அனைத்தையும் கண்டி முஸ்லிம்கள் செய்ய வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
முஸ்லிம் வாக்கு வங்கியின் ஒரு பகுதியினய முசம்மில் ஹஜியார், ஜுஹைர் ஹஜியார், என்.எம்.அமீன் போன்ற முஸ்லிம் சமூகத் தலைவர்கள் தலைமையில், SLMC, ஏ.சி.எம்.சி மற்றும் என்.யு.ஏ தலைவர்களின் கைக்கூலிகளால் நடத்தப்பட்ட செய்தி வெளியீடுகள் மற்றும் ஊடக நாடகங்களால் அவர்கள் 2010, 2015 இல் முஸ்லீம்கள் ஏமாற்றப்பட்டனர். முஸ்லீம்கள் ஏமாற்றப்படுவதற்கு இனி தயாராக இல்லை. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு 2019 -இல் வாக்களித்த 300,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பாராளுமன்றங்களுக்கான எம்.பி.யின் தேசிய பட்டியல் நியமனங்களில் களுத்துறை முஸ்லிம்கள் மற்றும் கண்டி மாவட்ட வாக்காளர்களின் வாக்குகளாளும் க்மற்றும் கோதபய ராஜபக்ச ஆகியோரின் உதவியால் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி, மர்ஜன் ஹஜியார் அந்த வாய்ப்பைப் பெற முடியும். அது நடக்கும்படி முஸ்லிம்களான நாம் துவாவைக் கேட்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் ஏற்கனவே "பொட்டுவா" க்கு வாக்களித்த 300,000 முஸ்லீம்கள், இந்த முறை கிட்டத்தட்ட 650,00 முஸ்லீம்கள் SLPP க்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.
Noor Nizam - Convener "The Muslim Voice".
இனவாதத்துக்கு அடிப்படை, அநீதி.
ReplyDeleteஅது ஜனாஸா எரிப்பாகவும் இன்னும் தொடர்கிறது.
நீங்கள் எரிப்பது அல்லாஹ்வின் கட்டளைகளையும்தான்.
55 நாடுகளின் அரிதான ஆதரவையும்தான்.
இன்னும் 180 கோடி உள்ளங்களையும்தான்.
சண்டையை தூண்டிவிட்டு அணைப்பது எளிது.
அத்தனை அழிவுக்கும் பொறுப்பு இனவாத சக்திகளைப் போஷிப்போரே.
அந்தச் சக்தி அடியோடு அகற்றப்பட வேண்டும், இந்நாடு உருப்பெற வேண்டும் என்றால். அநீதிக்கு துணை நிற்பது ஓர் முஃமினின் பண்பல்ல:
"முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்".
(அல்குர்ஆன் : 5:8)
In case, after 2/3 winning, when they go to constintutional changes with full power to remove the remaining rights of minorities one by one, where will be these callers ? At maximum they will avoid going for voting. Will these callers be able to oppose a constitutional change that most probably going to remove many rights of Muslim? Even they could not stop the burning of Dead Muslim's covid bodies. Will they have strength to do anything rather than being absent for such voting?
ReplyDeleteAt that time.. they will simply answer the same way they did with these covid bodies burning situation.
It is only Allah who can and will help us NOT any political parties.
NOTE: It seems from their speech, they are warning people that If you not vote us, then be ready to face problem as in the past. (who conducted such evils on muslims in the past ?).
Same time, the opposition too useless as they kept silent and failed to protect Muslims from the evil hands of racist at that time due to their weakness in power.
Allah is enough for us. Let us raise our hand to Allah, asking to destroy the evil rulers and give us peaceful rulers, who respect the rights of each and every individuals.
மொட்டு வுக்கு வாக்களிப்போர் ஜனாஸா எரிப்பை சரி காண்பவர்கள் என்பதில் சந்தேகமில்லை...
ReplyDelete