Header Ads



குருணாகல் சம்பவத்தின் உண்மை, விரைவில் வெளியாகும் - பிரதமர்

தொல் பொருட்களை அழித்து விட்டதாக பெரிதாக சத்தமிடும் எதிர்க்கட்சியினர் அன்று பகிரங்கமாக தொல்லியல் முக்கியத்துவமிக்க இடங்களை அழித்தனர் என்பதை முழு நாடும் நன்கு அறியும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வரலாற்று பெறுமதியான இடம் எனக் கூறப்படும் குருணாகல் நகரில் உள்ள அரச மண்டபம் இடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை தற்போது நடைபெறுகிறது.

இதன் பின்னர் உண்மையான நிலைமை என்ன என்பது தெரியவரும். இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் எதிர்க்கட்சியினர் தேர்தல் கூட்டங்களில் எமக்கு சேறுபூச தலைப்புகளை தேடி வருகின்றனர்.

இவர்கள் அன்று நாட்டு மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. இவர்கள் அன்று தொல்லியல் முக்கியத்துமிக்க எச்சங்களை கூட அகற்றினர்.

குருணாகல் சம்பவத்தின் உண்மை விரைவில் வெளியாகும்” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.