பெரும்பான்மை ஆசனங்களை, கைப்பற்றுவது அவசியமாகும் - பிரதமர் மஹிந்த
(இராஜதுரை ஹஷான்)
தேச துரோக நிபந்தணைகளுக்கு அடிபணியாமல் பலமான அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றுவது அவசியமாகும். தேசிய வளங்ளை விற்ற ஐக்கிய தேசிய கட்சியினர் திருடர்களுக்கு ஒப்பானவர்கள். மிகுதியாகவுள்ள வளங்களை கொள்ளையடிக்கவே மீண்டும் மக்களாணையை அவர்கள் கோருகிறார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி- குண்டசாலை பகுதியில் இன்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்கால தலைமுறையினருக்கு சொந்தமான தேசிய வளங்களை விற்ற ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் திருடர்களுக்கு ஒப்பானவர்கள். மிகுதியாகவுள்ள வளங்களை சூறையாடி கொள்கையடிப்பதற்கே பொதுத்தேர்தலில் மீண்டும் மக்களாணையை கோருகிறார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் பொதுத்தேர்தல் ஊடாக சிறிகொதாவை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இவர்களுக்கு மக்கள், அபிவிருத்தி குறித்து எவ்வித அக்கறையும் கிடையாது. சிறிகொதாவை கைப்பற்ற தேர்தலில் போட்டியிட தேவையில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மொட்டு: சின்னத்தில் தாராளமாக இணைந்துக் கொள்ளலாம்.
தேச துரோக நிபந்தனைகளுக்கு அடிபணியாமல் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பொதுஜன பெரமுன பெற வேண்டும். சிறந்த அரசாங்கத்தை ஸ்தாபிக்க எமக்கு ஆதரவு வழங்குவது மக்களின் கடமையாகும். அனைத்து இன மக்களும் ஒற்றமையாக வாழும் ஒருமித்த நாட்டை நிச்சயம் உருவாக்குவோம்
ஐக்கிய தேசிய கட்சியை மீள் புனரமைக்க முடியாத அளவிற்கு பிளவுப்படுத்தியுள்ளார். ஆகவே ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் அரசியலில் நிலையற்ற நிலையில் உள்ளார்கள். நாட்டை பாதுகாப்ப இவர்கள் எம்முடன் இணைய வேண்டும். பயனற்ற எதிர் தரப்பினரை நம்பி இனி பயன்கிடைக்காது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். .
ஐதேகட்சி பிளவுபட்டு சின்னாபின்னமாகியுள்ளதால், அதன் அனைத்து ஓட்டுகளும் பொஹொட்டுவக்குத்தான் கிடைக்கும்.அப்போது ராஜபக்ஸ குடும்ப ஆட்சியை இன்னும் ஐநூறு ஆண்டுகளுக்கு இலங்கையில் நிரந்தரமாக அமைக்கலாம்.அப்போது இலங்கை புதிய சிங்கப்பூராக மாறும். ஐரோப்பியர்கள் இலங்கையில் குடியுரிமை கோருவார்கள்.இலங்கை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடன் கொடுக்கும்.மிகுந்த கட்டுப்பாட்டுடன் சீனர்களுக்கு இலங்கையில் குடியுரிமையும் வழங்கப்படும்.
ReplyDelete