Header Ads



பல்கலைக்கழகங்களில் கொரோனா தொற்று ஆபத்தா...?


கொழும்பிலுள்ள பல்கலைக்கழகங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படும் ஆபத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 3 மாதங்களாக அரசாங்கம் மேற்கொண்ட திட்ட மிடல் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டு மக்கள் சுகாதார ஆலோசனைகளை மறந்து செயற்படும் நிலையை தற்போது காண முடிவதாகக் குறிப்பிடப் படுகின்றது.

கொழும்பு மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் இறுதி பரீட்சை யின் பின்னர் ஹோலி பண்டிகையைக் கொண்டாடி யுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வி விஞ்ஞான பீடத்தில் விருந்து ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இதனால் இவ்வாறான பாரியளவு கூட்டம் ஒன்று கூடிய சந்தர்ப்பத்தில் இசை வழங்குபவர்கள், புகைப்பட கலை ஞர்கள் போன்ற சமூகத்துடன் தொடர்பில் இருப்பவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும் ஜூலை மாதம் 31ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் மாதம் முதலாம் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் விஞ்ஞான பீடங்கள் பலவற்றின் இறுதி பரீட்சை மற்றும் பயிற்சிகள் நிறைவடைந்த பின்னர் இவ்வாறான நிகழ்வு கள் நடத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த நிகழ்வுகளில் வெளிநபர்களை இணைத்துக் கொள்ளாமல் சுகாதார பரிந்துரைகளை உரிய முறையில் முன்னெடுப்பது நிறுவனங்களின் பிரதானிகளின் பொறுப்பாகும்.

அவ்வாறு செயற்படாவிட்டால் பல்கலைக்கழகங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.