வாக்குகளை சிதறடிப்பதே, முஸ்லிம் சுயேட்சைக் குழுக்களின் நோக்கம் - பாரிஸுக்கு வாக்களிக்க திலும் வேண்டுகோள்
உலகில் உள்ள ஏதாவது ஒரு பலம் வாய்ந்த கட்சி தேர்தலில் இறங்கும் போது, சில சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் இறங்குவார்களா என்று கேள்வி எழுப்பிய முன்;னாள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சரும் பொதுஜன பெரமுன இளைஞர் முன்னணி தலைவரும் கண்டி மாவட்ட வேட்பாளருமான திலும் அமுனுகம, இவ்வாறான நிலைமை இலங்கையில் இருப்பதாகவும், இதற்கு மக்கள் ஏமாந்து விட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
அக்குறணை, மல்வானஹின்னையில் இடம்பெற்ற தேர்தல் பிராசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடும்போது, சுயேட்சைக்; குழுக்கள் எதுவாக இருப்பினும், குறிப்பாக முஸ்லிம் சுயேட்சைக் குழுக்கள் கூட அரசாங்கத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமலேயே உள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் பொதுமக்களின் வாக்குகளைச் சிதறடிக்கச்; செய்யும் ஒரு சதித் திட்டமாகவே அமையும். பலம் வாய்ந்த ஒரு அரசியல் கட்சி போட்டியிடும் போது, சுயேட்சைக் குழுக்களை இத் தேர்தலில் களமிறக்கி வாக்குகளைச் சிதறடிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவைகள் அனைத்தும்; எதிர்வரும் 5ஆம் திகதி காற்றோடு கலக்கக் கூடியதாக உள்ளது என்பதே உண்மை.
எனவே, இவ்வாறான சதித்திட்டங்களுக்கு பொதுமக்கள் குறிப்பாக, முஸ்லிம் சமூகம் ஏமாறாமல் உறுதியாக ஆட்சியமைக்கும் பலம் வாய்ந்த ஆளும் கட்சிக்கு வாக்குகளை அளிக்குமாறு வேண்டுகின்றேன். விசேடமாக, இம்முறை கண்டி மாவட்டத்தில்; பொதுஜன பெரமுனவில்; போட்டியிடும் ஏ.எல்.எம். பாரிஸ் ஹஜியாருக்கு உங்கள் பெறுமதியான வாக்குகளை அளித்து அவரை பாராளுமன்றம் அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். இதன் மூலம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர்; மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையின் கீழ் அமையவுள்ள பலம் வாய்ந்த புதிய அரசாங்கத்தின் ஊடாக உங்களுக்குத்; தேவையான அபிவிருத்தித் திட்டங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் வேண்டிக்கொள்கின்றேன்.
(ஐ.ஏ. காதிர் கான்)
Post a Comment