Header Ads



ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நாடு, திரும்ப முடியாது சவுதியில் தவிர்ப்பு

சவுதி அரேபியாவில் தொழில் புரிய சென்று அதற்கான ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நாடு திரும்ப முடியாது கடும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுவலகத்தில் மாத்திரம் மீண்டும் நாடு திரும்புவதற்காக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தம்மை பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.

இவர்களில் ஆயிரம் பேர் சவுதியில் இருந்து வெளியேறுவதற்காக முத்திரைகளையும் தமது கடவுச்சீட்டுக்களில் பதிந்துக்கொண்டுள்ளனர்.

சவுதியில் இலங்கை தூதரகம் ரியாத் நகரில் அமைந்துள்ளதுடன் அங்கு இதனைவிட அதிகளவானோர் நாடு திரும்ப பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.

இவர்களில் பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்த ஊழியர்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் பெரும்பாலானவர்கள் எவ்வித வருமானமும் இன்றி இருக்கின்றனர். சிலர் தமக்கான செலவுகளை கூட செய்ய முடியாத பெரும் கஷ்டமான நிலைமையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கைர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துச் செல்வதை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜித்தா நகரில் உள்ள இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் முடியும் வரை இவர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்லும் திகதியை கூட அறிவிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக அந்த அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எனினும் தூதரக அதிகாரிகள் தம்மை இலங்கைக்கு அனுப்பி வைக்க போதுமான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என்பதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சவுதியில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வருடாந்தம் பெருமளவிலான அந்நிய செலாவணியை பெற்றுக்கொண்டும் வெளிநாடுகிளல் தொழில் புரியும் இலங்கையர்கள் கஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கும் நிலையில், அவர்களை தாய் நாட்டுக்கு அழைத்து வர அதிகாரிகள் கூடுதலான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.